fbpx

’’சமோசாவுக்கு ஸ்பூன் தரவில்லை’’-முதல்வர் ஹெல்ப்லைனுக்கு புகார்.. அதிகாரிகள் என்ன பண்ணாங்க  தெரியுமா?..

’’சமோசாவுக்கு ஸ்பூன் தரவில்லை ’’ என முதல்வர் ஹெல்ப்லைனுக்கு மாணவர் ஒருவர் புகார் அளித்த வினோதமான சம்பவம் நடந்துள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் சத்தர்பூர் பகுதியில் சமோசா கடை இயங்கி வருகின்றது.அந்த கடையில் சமோசா சாப்பிட்ட நபருக்கு தட்டு மற்றும் ஸ்பூன் தரவில்லை என கூறப்படுகின்றது. இதையடுத்து அந்த நபர் முதல்வரின் ஹெல்ப்லைன் எண்ணுக்கு தொடர்பு கொண்டார். அதில் , ’’ என்பெயர் வன்ஷ் பகதூர் , நான் சதர்பூர் பேருந்து நிலையில் உள்ள ஒரு கடையில் சமோசா சாப்பிட்டேன். காலையில் உணவும் இங்குதான் சாப்பிட்டேன். நான் வாங்கிய சமோசாவுக்கு ஸ்பூன் மற்றும் தட்டு தரவில்லை. சமோசாவை பேக் செய்து தந்தவர் சுத்தமாக இல்லை. எனவேஇந்த பிரச்சனையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.

இதைக் கேட்ட அதிகாரிகள் முதலில் நகைத்தனர். பின்னர் இவர் கூறுவதிலும் நியாயம் உள்ளது. சுத்தமாக இல்லை முறையான சேவை இல்லை என கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தொடர்ந்து இது போல செயல்படுவார்கள். என நினைத்து அந்த புகாரை ஏற்றுக்கொண்டனர். ’’ சமோசா கடைக்கு தொடர்பு கொண்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இதையடுத்து பொதுமக்கள் எந்த சேவை குறைபாடு இருந்தாலும் புகார் அளிக்கலாம் என இந்த சம்பவம் நிரூபித்துள்ளது என கூறுகின்றனர்.

Next Post

மூட்டைகளில் சில்லரைகளை கொடுத்து பைக் வாங்கிய இளைஞர்

Tue Sep 6 , 2022
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மூட்டைகளில் சில்லரைகளை கொண்டு வந்து பத்து ரூபாய் நாணயம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இளைஞர் ஒருவர் பைக் வாங்கியுள்ளார். கிருஷ்ணகிரி அருகே ஓசூரில்  கெலமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜீவ் (31) . இவர் தனக்கு சொந்தமான தனியார் மருத்துவமனையில் நிர்வாக மேலதிகாரியாக வேலை பாரத்த்து வருகின்றார். டி.வி.எஸ்.அப்பாச்சி வாங்குவதற்காக கடந்த 3 ஆண்டுகளாக பத்து ரூபாய் நாணையம் சேர்த்துள்ளார். சுமார் ரூ.1,80000 எடுத்து வந்து பைக்கை […]

You May Like