கர்நாடகாவில் தேர்தல் பிரசாரத்தில் அனுமன் பெயரை கூறியதாக பிரதமர் மோடி மீது காங்கிரஸ் தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்துள்ளது.
பிரதமர் மோடி மே 2-ம் தேதி முதல் தனது தேர்தல் பேரணியில் வலதுசாரி அமைப்பான பஜ்ரங்தளை தடை செய்வதாக வாக்குறுதி அளித்ததற்காக காங்கிரசை தொடர்ந்து தாக்கி பேசி வருகிறார், மேலும் தடையை பஜ்ரங்பாலி, பகவான் ஹனுமானுக்கு “பூட்டு” என்று பேசி இருந்தார்.
இந்த நிலையில் பிரதமர் மோடி புதன்கிழமை கர்நாடகாவில் மூன்று உரைகளிலும் ‘ஜெய் பஜ்ரங்பலி’ என்று முழக்கமிட்டார். தேர்தல் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் ஆகியவற்றில் மதத்தின் பெயரால் வாக்கு கேட்கும் நோக்கத்தில் மட்டும் இந்துக் கடவுள்கள் மற்றும் தெய்வங்களின் பெயர்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு பிரதமருக்கு ஆணையம் உத்தரவிட வேண்டும் என்று ஆணையம் ஆணையத்திடம் காங்கிரஸ் கோரிக்கை வைத்துள்ளது .