fbpx

பாகிஸ்தானில் நடைபெற்ற தற்கொலை படை தாக்குதல்….! பலி எண்ணிக்கை 40ஐ கடந்தது….!

பாகிஸ்தான் நாட்டை பொறுத்தவரையில் தீவிரவாத அமைப்புகள் அந்த நாட்டின் துணை ராணுவ படையை போலவே செயல்பட்டு வருவதாக பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.ஒருபுறம் இப்படி ஒரு கருத்து பரவலாக இருந்தாலும், இன்னொரு புறம் பாகிஸ்தான் நாட்டிற்கு எதிரான பல்வேறு தாக்குதல்களையும் தீவிரவாத அமைப்புகள் முன்னெடுத்திருக்கிறது.

அப்படி தீவிரவாத அமைப்புகள் பாகிஸ்தானின் மீது தாக்குதல் நடத்தும் போதெல்லாம் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பலியாகி இருக்கின்றன. இவை அனைத்தையும், உலக நாடுகள் அனைத்தும் கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது.

கடைசியாக பாகிஸ்தான் நாட்டில் பதுங்கி இருந்த ஒசாமா பின்லேடனை அமெரிக்க ராணுவம் அதிரடியாக சுட்டுக் கொன்றது. அதன் பிறகு அமெரிக்கா பாகிஸ்தானில் இருந்த தன்னுடைய ராணுவத்தை திரும்ப பெற்றுக் கொண்டது.பாகிஸ்தானை பொருத்தவரையில் ராணுவ பலம் மிகவும் குறைவு என்பதால் பாகிஸ்தான் அரசியல்வாதிகள் சட்ட விரோதமாக இந்த தீவிரவாத அமைப்புகளை கொண்டு தான் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள் என்ற கருத்தும் பரவலாக இருக்கிறது. ஆனால் அது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.

இந்த நிலையில் தான், நேற்று பாகிஸ்தானின் பஜாவூர் மாவட்டத்தின் கார் நகரில் ஜாமியத் உலமா இஸ்லாம் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் சுமார் 400க்கும் அதிகமானோர் பங்கேற்றுக் கொண்டனர். இந்த சூழ்நிலையில், இந்த மாநாட்டில் திடீரென்று தற்கொலை படை தாக்குதல் நடத்தப்பட்டது.


யாரும் எதிர்பாராத விதத்தில் நடைபெற்ற இந்த தற்கொலை படை தாக்குதலில், பாஸில் அமைப்பின் தலைவர் மௌலானா ஜியாவுல்லா ஜான் உட்பட பலர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டனர். இந்த தற்கொலை படை தாக்குதலில் சுமார் 10 கிலோ வெடி பொருட்கள் பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அதோடு, இந்த தற்கொலை படை தாக்குதலில் 44 பேர் பலியாகி இருக்கிறார்கள். நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்திருக்கிறார்கள். இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக விசாரணை நடந்து வருவதாக தெரிகிறது. இந்த குண்டு வெடிப்பிற்கு இதுவரையில் எந்த ஒரு தீவிரவாத அமைப்போ அல்லது தனிநபரோ பொறுப்பேற்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது.

Next Post

2024-ல் BMW நிறுவனத்தின் என்ட்ரி லெவல் பைக்காக இந்த பைக் விற்பனை செய்யப்படுகிறது..!

Mon Jul 31 , 2023
இந்தியாவில் ஸ்போர்ட்ஸ் பைக் விற்பனை செய்யப்படும் BMW நிறுவனத்தின் G 310 R பைக்கின் புதிய 2024 மாடல் வெளியாகியுள்ளது. இந்த பைக்கின் டிசைன் எதுவும் மாற்றம் செய்யப்படவில்லை. புதிய கலர் ஆப்ஷன் மட்டுமே வெளியாகியுள்ளது. முன்பு இருந்த அதே டிசைன், மஸ்குலர் பியூயல் டேங்க், என்ஜின் கவுல், சைடு ஸ்லாங் எக்ஸாஸ்ட், 5 ஸ்போக் வீல் உள்ளது. என்ஜின் வசதியாக 33.5 BHP மற்றும் 28NM டார்க் திறன் […]

You May Like