இந்திய ரிசர்வ் வங்கி துணை கவர்னர் பதவிக்கான பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் இப்பணிக்கு ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் Deputy Governor பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 22.6.2023 தேதியின் படி அதிகபட்சம் 60 ஆக இருக்க வேண்டும்.Deputy Governor பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணி சார்ந்த துறையில் 15 வருடங்கள் banking and financial துறையில் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்திய ரிசர்வ் வங்கி பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Level 17 ஊதிய அளவின் படி மாதம் ரூ.2,25,000/- சம்பளமாக வழங்கப்படும் .Deputy Governor பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.