fbpx

இந்தியாவில் சமையல் எண்ணெய் விலை சரிவு…! மத்திய பொது விநியோகத் துறை தகவல்..!

சமையல் எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள சரிவை நுகர்வோருக்கு விரைவாகக் கொண்டு சென்று சேர்க்க வேண்டும் என்று மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை செயலாளர் சஞ்சீவ் சோப்ரா கூறியுள்ளார்.

இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்ட சமையல் எண்ணெய்களின் சர்வதேச விலைகள் கீழ்நோக்கிய போக்கில் உள்ளன, இது இந்தியாவில் சமையல் எண்ணெய் துறையில் சாதகமான சூழ்நிலையை அளிக்கிறது. உலகளாவிய விலை வீழ்ச்சிக்கு மத்தியில் சமையல் எண்ணெய்களின் சில்லறை விலையை மேலும் குறைப்பது குறித்து ஆலோசிக்க, முன்னணி தொழில்துறை பிரதிநிதிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.கடந்த இரண்டு மாதங்களில் பல்வேறு சமையல் எண்ணெய்களின் உலகளாவிய விலைகள் ஒரு டன்னுக்கு 200-250 அமெரிக்க டாலர்கள் வரை குறைந்துள்ளது, ஆனால் சில்லறை சந்தைகளில் இது பிரதிபலிக்க காலதாமதம் ஆகிறது.

சில்லறை விலைகள் விரைவில் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உணவு மற்றும் பொது விநியோகத் துறை, நாட்டில் சமையல் எண்ணெய்களின் விலைகளை உன்னிப்பாகக் கண்காணித்து ஆய்வு செய்து வருகிறது.தற்போது சர்வதேச சந்தையில் சமையல் எண்ணெய் விலை குறைந்துள்ளது. உள்நாட்டு சந்தையில் சமையல் எண்ணெய்களின் விலை வீழ்ச்சி படிப்படியாக உள்நாட்டு சந்தையில் எதிரொலித்து வருவது.

Vignesh

Next Post

காட்டுக்கு நடுவே ஒரு நட்சத்திர கோட்டை..!! இது இந்தியாவில் எங்கு இருக்கு தெரியுமா..? சுவாரஸ்ய தகவல்..!!

Fri May 5 , 2023
இந்தியாவின் கடந்த காலத்தைப் பற்றி பேச வேண்டுமென்றால், இந்திய முழுவதும் உள்ள அரண்மனைகள், போர் நினைவுச் சின்னங்கள், கோட்டைகள், கொத்தளங்கள் எல்லாம் இந்தியாவின் கடந்தகால கதைகளை தங்களது பாணியில் சொல்லிக்கொண்டு இருக்கும். அப்படி ஒரு இடத்தைப் பற்றித்தான் இந்தப் பதிவில் பார்க்க இருக்கிறோம். கர்நாடக மாநிலம் ஹசன் மாவட்டத்தில் அமைந்துள்ள திப்பு சுல்தானின் காலத்தில் கட்டப்பட்ட மஞ்சராபாத் கோட்டை ராணுவ கட்டிடக்கலையின் மிகச்சிறந்த கட்டிடங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. நாட்டில் உள்ள முக்கிய […]
காட்டுக்கு நடுவே ஒரு நட்சத்திர கோட்டை..!! இது இந்தியாவில் எங்கு இருக்கு தெரியுமா..? சுவாரஸ்ய தகவல்..!!

You May Like