fbpx

தோனி ஜெர்சி நம்பர் 7…… அதிர்ஷ்டத்தை கொண்டு வரும் எண் 6…..நடிகை ஜான்வி கபூர் கருத்து

மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர், பாலிவுட்டில் வளர்ந்து வரும் முன்னணி நடிகையாக உள்ளார். அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வரும் இவர், கிரிக்கெட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள மிஸ்டர் அண்ட் மிஸ்சஸ் மாகி (Mr & Mrs Mahi) என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். ராஜ்குமார் ராவ் நடித்துள்ள இந்தப் படம் வரும் மே 31ம் தேதி வெளியாக உள்ளது.

இந்த படத்தில் மஹிமா என்ற காதாபாத்திரத்தில் நடித்துள்ள ஜான்வி கபூர், அப்படத்தின் ப்ரோமோஷன் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலானது. அந்த புகைப்படங்களில் அவர் அணிந்திருந்த ஸ்லீவ்லெஸ் டாப்ஸில் ‘6’ என்ற எண் இடம்பெற்றிருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்நிலையில் அதுபற்றி ஜான்வி கபூர் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில், ‘7’ என்பது கிரிக்கெட் வீரர் தோனியின் ஜெர்சி நம்பர் ஆகும். அது அவருடைய எண் மட்டுமே ஆகும். வேறு யாருக்கும் சொந்தம் கிடையாது. எனவே, மஹிமா கதாப்பாத்திரத்தின் ஜெர்சிக்கு அதுபோல மற்றோரு என்னை தேர்வு செய்ய வேண்டி இருந்ததால் எனது லக்கி நம்பரான ‘6’ என்ற என்னை பயன்படுத்திக்கொண்டோம் என்றார். மேலும், இந்த எண் அதிர்ஷ்டத்தை கொண்டு வரும் என்று நம்புவதாகவும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

வெறும் ரூ.5 ஆயிரம் முதலீடு செய்தால் ரூ.3,56,000 லாபம் பார்க்கலாம்..!! போஸ்ட் ஆபீஸின் சூப்பர் திட்டம்..!!

shyamala

Next Post

இந்திய அஞ்சல் துறையில் வேலை…! B.E முடித்த நபர்கள் விண்ணப்பிக்கலாம்..!

Thu May 16 , 2024
இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள INFORMATION TECHNOLOGY EXECUTIVES பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு என 54 காலி பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலிபணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்களின் வயதானது அதிகபட்சம் 27 க்குள் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையின் 3 ஆண்டுகள் முன் அனுபவம் இருக்க வேண்டும். மேலும் பணிக்கு கல்வித்தகுதியாக அரசு அல்லது அரசு அங்கீகரித்த கல்வி நிலையத்தில் […]

You May Like