fbpx

காபி, டீ ரொம்ப சூடாக குடிப்பவரா நீங்கள்?… இனி அந்த தவறை செய்யாதீங்க!… கேன்சர் வரும் அபாயம்!

எந்த ஒரு பானத்தையும் அதிக சூடாக அல்லது 60 டிகிரி செல்சியஸ்க்கு மேலான வெப்பநிலையில் 700 மில்லி லிட்டருக்கும் மேலாக தினமும் அறிந்தும் பட்சத்தில் உணவு குழாய் தொற்று நோய் ஏற்படும் அபாயம் 90% இருப்பதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

அதிக சூடாக டீ, காபியை தொடர்ந்து குடித்தால் உடல் நலனில் எந்த மாதிரியான பாதிப்பு ஏற்படும் என்பது குறித்து மருத்துவ ஆய்வு ஒன்று பட்டியலிட்டுள்ளது. தொடர்ச்சியாக 60 செல்சியஸ் டிகிரிக்கும் மேலான சூடான பானங்களை அருந்தினால் கேன்சர் உள்ளிட்ட பாதிப்புகள் கூட வர வாய்ப்பு இருக்கின்றதாக ஆய்வில் சொல்லப்பட்ட விவரங்களை தற்போது பார்க்கலாம். காலையில் விழித்ததும் பலருக்கு டீ, காபி குடிக்காவிட்டால் எந்த வேலையும் ஓடாது. அன்றைய தினம் முழுவதும் எதையோ இழந்தது போன்ற உணர்வோடு இருப்பார்கள். சர்வதேச மெடிக்கல் ஜுவலிசம் டீ, காபி அதிக சூடாக குடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் பற்றிய ஆய்வு முடிவு வெளியாகி உள்ளது.

அதில் எந்த ஒரு பானத்தையும் அதிக சூடாக அல்லது 60 டிகிரி செல்சியஸ்க்கு மேலான வெப்பநிலையில் 700 மில்லி லிட்டருக்கும் மேலாக தினமும் அறிந்தும் பட்சத்தில் உணவு குழாய் தொற்று நோய் ஏற்படும் அபாயம் 90% இருப்பதாக ஆய்வில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உணவுக் குழாயில் செல்கள் சாதாரணமான முறையில் கட்டுப்பாடு இன்றி வளரும்போது உணவு குழாயில் புற்றுநோய் ஏற்படுவதுண்டு. அதிக சூடான பானங்களின் பட்டியலில் தற்போது டீ காபியும் அடங்கும் என்று உலக சுகாதார அமைப்பும் கூறியுள்ளது. இந்த அமைப்பு 10 நாடுகளுடன் இணைந்து 23 நாடுகளுடன் இணைந்து அதிக சூடான பானத்திற்கும் கேன்சருக்கும் உண்டான தொடர்பு குறித்து ஆய்வு நடத்திட ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆய்வை மதிப்பாய்வு செய்துள்ளது. அது மட்டுமல்லாமல் அதிக சூடாக டீ, காபி குடித்தால் நமதுநாக்கில் உள்ள சுவை உணர்வுகளை கட்டு படுத்தும் பகுதி பாதிக்கப்படும்.

நமது நாக்கில் உள்ள சென்சிட்டிவான டேஸ்ட் செல் சூடான பானம் அருந்தும் போது பிற செல்களைப் போலவே பாதிப்படையும். தொடர்ந்து சூடான பானங்களை அருந்தும் போது நமது நாக்கில் உள்ள சுவையூட்டிகள் நிரந்தரமாக பாதிப்படைய வாய்ப்பிருக்கிறது. அதிக சூடாக இருந்தால் உதடுகள் கூட பாதிப்படையுமாம். உதடுகள் அதிக சூட்டால் பாதிக்கப்பட்டு கருமையாக கூட மாறும் என்கிறது அந்த ஆய்வில். வழக்கமான மிதமான சூட்டுடன் காபி, டீ குடிப்பவர்களுக்கு எல்லாம் அச்சப்பட வேண்டியதில்லை. தினமும் 700 மில்லி லிட்டருக்கும் மேலாக 60 டிகிரி செல்சியஸ் மற்றும் அதற்கு மேலான வெப்பத்துடன் பானங்களை தொடர்ந்து அருந்தினால் தான் உணவு குழாய் தொற்று நோய்க்கான ரிஸ்க் அதிகம் இருப்பதாக ஈரானை சேர்ந்த ஆய்வு அறிவித்துள்ளது. எனவே எதுவாக இருந்தாலும் அளவிற்கு அதிகமாக எடுத்துக் கொள்ளாமல் முறையான பராமரிப்போடு எடுத்துக் கொள்வது நமக்கு நன்மையை விளைவிக்கும்.

Kokila

Next Post

உடல், சருமம், கூந்தல் அனைத்து பிரச்சனைக்கும் ஒரே தீர்வு!... இந்த தூள் மட்டும் ட்ரை பண்ணுங்க!

Thu Jul 6 , 2023
ஆயுர்வேதத்தில் வேப்ப தூள் பல்வேறு மருத்துவ செயல்பாட்டிற்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இது வீட்டில் தயாரிக்கக்கூடிய ஒரு பொருள். இது எதற்கு பயன்படுகிறது என்பதை பற்றி இதில் பார்ப்போம். எளிமையாக கிடைக்கக்கூடிய விலையில்லா வேப்ப இலை உடலில் பலவித குறைபாடுகள் தீர்வாக அமைகிறது. உடல், சருமம், கூந்தல் அனைத்துக்கும் நன்மை செய்யக்கூடிய இந்த வேப்பம் பூ நன்மைகள் தெரிந்துகொள்வோம். முடி கொட்டும் பிரச்சனைகளுக்கும், வழுக்கை பிரச்சனைகளுக்கும் வேப்பம் சரியான சிகிச்சை அளிக்க […]

You May Like