சொந்த ஊர், நட்பு, குடும்பம் என அனைத்தையும் தியாகம் செய்து தன்னுடைய தாய்நாட்டிற்காக எல்லையில் நின்று தனது உயிரை பற்றியும் கவலைப்படாமல் பணியில் ஈடுபடும் ராணுவ வீரர்களின் கதைகளை கேட்டும் பொழுதே மெய் சிலிர்க்க வைக்கும். இந்திய ராணுவத்தில் இருந்து கொண்டு பல முக்கியமான நேரங்களில் தெளிவாக செயல்பட்டு உயிர்த்தியாகம் செய்த ராணுவ வீரர்களும் உள்ளனர். அப்படிபட்டவர்களின் மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா?
பதவியும் சம்பளமும் ;
- இந்திய ராணுவத்தில் லெப்டினன்ட் பதவியை பெறும் ஒருவர், 2 ஆண்டுகள் சேவையை முடித்தபின் கேப்டன் பதவி உயர்வு பெறுவார். லெப்டினன்ட் பதவிக்கு அடிப்படை சம்பளம் ரூ.21,700 உடன் மொத்த சம்பளம் ரூ.57,138 ஆகும். கேப்டன் பதவியில் இருப்பவருக்கு ரூ.61,300 – ரூ.1,93,900 வரை கிடைக்கும்.
- கேப்டன் பதவியில் 2 ஆண்டுகள் பணியாற்றிய பிறகு, மேஜர் பதவிக்கு உயர்த்தப்படுவார். மேஜர் நிலையில் இருக்கும் வீரருக்கு ரூ.69,400 – ரூ.2,07,200 வரையும் சம்பளம் வழங்கப்படுகிறது.
- 6 ஆண்டுகள் மேஜர் பதவியை வகித்தபின், லெப்டினன்ட் கர்னலாக பதவி உயர்வு பெறுவார். லெப்டினன்ட் கர்னலுக்கு ரூ.1,21,200 – ரூ.2,12,400 வரை ஊதியம் வழங்கப்படுகிறது.
- 13 ஆண்டுகள் இந்த பதவியில் இருப்பவர், கர்னல் பதவியை பெறுகிறார். அவருக்கு மேல் பதவி வகிக்கும் கர்னல் ரூ.1,30,600 – ரூ.2,15,900 வரை ஊதியம் வழங்கப்படுகிறது.
மொத்தமாக 26 ஆண்டுகள் சேவையாற்றிய பிறகுதான் ஒருவர் கர்னல் பதவியை அடைய முடியும். கர்னல் பின்னர், பிரிகேடியர் பதவியை அடைவார். ஆனால், பிரிகேடியர் பதவிக்கு சில நிபந்தனைகள் இருக்கின்றன. அந்த நிபந்தனைகளை பூர்த்தி செய்த ஒருவர் மட்டுமே பிரிகேடியர் பதவிக்கு உயர முடியும். அதன்பிறகு மேஜர் ஜெனரல், லெப்டினன்ட் ஜெனரல் போன்ற பதவிகள் இருக்கின்றன. மிக முக்கியத்துவம் வாய்ந்த பதவியான பிரிகேடியருக்கு மாத ஊதியம் ரூ.1,39,600 – ரூ.2,18,200 வரையும் வழங்கப்படுகிறது.
Read more ; சாதிவாரி கணக்கெடுப்பு..!! சட்டப்பேரவையில் தீர்மானம்..!! முதலமைச்சர் முக.ஸ்டாலின் அதிரடி..!!