fbpx

ஆசை பட நாயகி சுவலட்சுமி நியாபகம் இருக்கா.? இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் தெரியுமா.?

தமிழ் சினிமாவில் ஆசை திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சுவலட்சுமி. இவர் மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவை பூர்வீகமாக கொண்டவர். ஆசை படத்தை தொடர்ந்து கோகுலத்தில் சீதை, கல்கி, லவ் டுடே என அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனதில் கனவு கன்னியாக வலம் வந்தவர்.

பொதுவாக இவர் குடும்ப பாங்கான திரைப்படங்களிலும் கதாபாத்திரங்களிலும் மட்டுமே நடித்து வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமா மட்டுமல்ல, தெலுங்கு, மலையாளம் கன்னட திரைப்படங்களிலும் தென்னிந்திய சினிமாவிலும் 90களில் தனக்கென ஒரு இடத்தை பெற்றிருந்தவர். சினிமாவில் நடிக்க வருவதற்கு முன் கிளாசிக்கல் டான்ஸராக பல மேடைகளில் தனது நடன அரங்கேற்றங்களை நிகழ்த்தி இருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து 1994 ஆம் ஆண்டு வங்காள மொழி திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். அதன்பிறகு இயக்குனர் வசந்த் இவரை ஆசை படத்தில் நடிப்பதற்காக தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தினார். 90களில் இறுதியில் சினிமா வாய்ப்புகள் இல்லாததால் இவர் சினிமா துறையில் இருந்து ஒதுங்கி விட்டார்.

சினிமாவில் இருந்து விலகிய பிறகு கலிபோர்னியாவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது. தற்போது தனது கணவருடன் இணைந்து அவரது தொழிலை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

Kathir

Next Post

படிக்க வந்த 15 வயது சிறுமி! படுக்கைக்கு அழைத்த 59 வயது உறவினர்… பாய்ந்த போக்சோ சட்டம்.!

Wed Nov 22 , 2023
வீட்டிற்கு படிக்க வந்த சிறுமியை 59 வயது நபர் அத்துமீறிய சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் 59 வயதான கந்தசாமி. இவர் மின்சார வாரியத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி வரும் இவர், நிலக்கோட்டையில் உள்ள இபி காலணியில் தங்கி வந்துள்ளார். இவரது வீட்டில், இவர்களது உறவினரின் 15 வயது மகள் தங்கி படித்து வந்திருக்கிறார். இந்நிலையில் கடந்த 18ஆம் தேதி இரவு கந்தசாமி […]

You May Like