fbpx

மக்களே அலர்ட்.. 5 நாட்களுக்கு கனமழை வெளுத்து வாங்கும்.. எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா..?

தமிழகத்தில் வரும் 31-ம் தேதி வரை கனமழை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

சென்னை வானிலை மையம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தமிழக கடலோரப்பகுதிகளின்‌ மேல்‌ நிலவும்‌ வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, சேலம், நாமக்கல்‌, தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, நீலகிரி, கோவை, மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோவை, திருப்பூர்‌, தேனி, திண்டுக்கல்‌, மதுரை, விருதுநகர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம்‌, நாமக்கல்‌, திருச்சி, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர்‌, கடலூர்‌, திருப்பத்தூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

வரும் 29-ம் தேதி, தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோவை, திருப்பூர்‌, தேனி, திண்டுக்கல்‌, மதுரை, சிவகங்கை, விருதுநகர், ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

வரும் 30,31 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம்‌, வேலூர்‌, திருப்பத்தூர்‌ மற்றும்‌ ராணிப்பேட்டை மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஒரளவு மேக மூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒருசில பகுதிகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது/ மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌.

குமரிக்கடல்‌ பகுதிகள்‌, மன்னார் வளைகுடா, தென்‌ தமிழக கடலோரப்‌ பகுதிகள்‌ மற்றும்‌ இலங்கையை ஒட்டிய தென்‌ மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகள், லட்சத்தீவு, மாலத்தீவுக்கடல் பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கி.மீ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.. எனவே இன்று முதல் வரும் 30-ம் தேதி வரை மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்‌..” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

Maha

Next Post

நாட்டின் 49-வது தலைமை நீதிபதியாக யு.யு.லலித் இன்று பதவியேற்பு.. குவியும் வாழ்த்துக்கள்..!

Sat Aug 27 , 2022
உச்ச நீதிமன்றத்தின் 49-வது தலைமை நீதிபதியாக யு.யு.லலித் பதவியேற்கிறார். நாட்டின் அடுத்த தலைமை நீதிபதியாக உதய்  உமேஷ் லலித் இன்று பதவியேற்கிறார். டெல்லியில் இருக்கும் குடியரசு தலைவர் மாளிகையில் ஜனாதிபதி திரௌபதி முர்மு தலைமை நீதிபதிக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து வந்த என்.வி ரமணா .நேற்றுடன் ஓய்வு பெற்றார். இந்நிலையில், அவருக்கு அடுத்தபடியாக மிக மூத்த நீதிபதியாக இருந்து வந்த யு.யு.லலித் […]

You May Like