fbpx

’சுய இன்பத்தால் பெண்களுக்கு முகப்பரு வருமா’..? மருத்துவ நிபுணர்கள் கூறும் உண்மை என்ன..?

முகப்பருக்கள் ஒருவரது முகத்தில் மட்டுமல்லாது அவரது மனதிலும் பெரிய வடுவை ஏற்படுத்துகிறது. முகப்பருக்கள் குறித்து எப்போதுமே கவலைப்படும் நபர்கள் இதன் காரணமாக மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். முகப்பரு என்பது பொதுவான ஒரு சரும நிலைதான். அனைத்து வயதினருக்கும் ஏதாவது ஒரு நேரத்தில் முகப்பரு ஏற்படுகிறது. முகப்பரு தடிப்புகள், எண்ணெய் சருமம் மற்றும் சில நேரங்களில் தொடுவதற்கு வலியை ஏற்படுத்தும்.

உடலுறுப்புகளைத் தொட்டு இன்பம் பெறுவதற்கான ஒரு வழி தான் சுயஇன்பம். ஒரு குற்றம் என்று நம்பப்படுகிறது. ஆனால் கட்டுப்படுத்தப்பட்ட சுயஇன்பம் உங்கள் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். சுயஇன்பத்தின் போது உடலில் டோபமைன் மற்றும் எண்டோர்பின் ஹார்மோன்கள் உற்பத்தியாகின்றன. டோபமைன் உடலில் அதிகரிக்கும் மன அழுத்தத்தைக் குறைக்கிறது. இது மனநிலை மாற்றங்களின் சிக்கலை தீர்க்கிறது.

சுய இன்பத்தால் முகப்பரு வருமா?

இளமை பருவத்தில் மோசமான உணவுப்பழக்கம் மற்றும் ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக முகப்பரு ஏற்படுகிறது. சுயஇன்பத்திற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர். சுயஇன்பம் தூக்கத்தை மேம்படுத்துகிறது. மன அழுத்தத்திலிருந்து உங்களை விலக்கி வைக்கிறது. சரியான முறையில் சுயஇன்பம் செய்தால் பிரச்சனையும் இல்லை, பாதிப்பும் இல்லை என்கின்றனர் நிபுணர்கள்.

சுயஇன்பத்திற்கும் முகப்பருவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது தெரிந்ததே. சுயஇன்பம் செய்யும் போது தூய்மையின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளுங்கள். மாதவிடாய் காலத்தில் சுயஇன்பம் பாதுகாப்பானதா என்ற கேள்விக்கான பதில், நிபுணர்களின் கூற்றுப்படி, மாதவிடாய் காலத்தில் ஒருவர் சுயஇன்பத்தில் ஈடுபடலாம். ஆனால், தூய்மை முக்கியம். மாதவிடாய் கோப்பையைப் பயன்படுத்தினால் அதை அகற்ற மறக்காதீர்கள். சுயஇன்பம் செய்யும் போது பிறப்புறுப்பு ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

Read More : விஜய்க்கு அச்சுறுத்தல்..!! தெரிந்தும் பாதுகாப்பு வழங்காத தமிழ்நாடு அரசு..!! கொந்தளித்த அண்ணாமலை..!!

Chella

Next Post

ஊக்க மருந்து புகாா்!. உலகின் NO.1 டென்னிஸ் வீரா் ஜானிக் சின்னருக்கு மூன்று மாதங்கள் தடை!

Sun Feb 16 , 2025
Doping scandal!. World's NO.1 tennis player Janik Chinn banned for three months!

You May Like