fbpx

Polio: காலை 7 முதல் 5 மணி வரை 43,051 மையங்களில் சொட்டு மருந்து முகாம்…! மிஸ் பண்ணிடாதீங்க மக்களே…!

தமிழகம் முழுவதும் இன்று பள்ளிகள் உள்ளிட்ட 43,051 மையங்களில் சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது.

தமிழ்நாடு முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது. ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் உள்ளிட்ட 43,051 மையங்களில் சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது. இதன் காரணமாக காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை மையங்கள் செயல்படும். இந்த நிலையில் இன்று ஊழியர்களுக்கு விடுமுறை கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்பணிக்காக பொது சுகாதாரத்துறை. ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், பள்ளிக்கல்வித்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை, வருவாய்த் துறை, ரோட்டரி சங்கம், மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபடவுள்ளனர். பெருமளவில் மக்கள் கூடும் இடங்களான பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், சந்தைகள், சினிமா அரங்குகள், வழிபாட்டுத்தலங்கள் மற்றும் சுங்கச்சாவடி போன்ற இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

Election: ஓரிரு நாட்களில் தேர்தல் தேதி அறிவிப்பு!… வழிபாட்டு தளங்களில் பரப்புரைக்கு தடை!… மீறினால் கடும் நடவடிக்கை!

Sun Mar 3 , 2024
Election: நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் ஆணையம் இன்னும் ஒரு சில தினங்களில் தேதியை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்தவகையில், தேர்தல் தேதி வெளியானவுடன் தேர்தல் நடத்தை விதிமுறைகள் வெளியாகவுள்ள நிலையில், தற்போது தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளுக்கு சில தேர்தல் நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது இதில் அரசியல் கட்சிகள் சாதி,மதம், மொழி அடிப்படையில் வாக்கு சேகரிக்க கூடாது தேவாலயங்கள், கோவில்கள், மசூதிகள் உள்ளிட்ட வழிபாட்டு தளங்களை தேர்தல் பரப்பரைக்கு […]

You May Like