ஈரோடு மாவட்டம் பர்கூர் மலை பகுதியைச் சார்ந்த தம்பதியினருக்கு ஏழு ஆண் குழந்தைகள் ஐந்து பெண் குழந்தைகள் என மொத்தம் 12 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த வாரம் அவர்களுக்கு 13 வதாக மூன்று கிலோ இடையில் ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அந்தப் பெண்ணிற்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர். ஆனால் அந்தப் பெண்மணி உடல் பலகீனமாக இருப்பதோடு அவருக்கு இரத்த சோகையும் இருப்பதால் அவரது கணவருக்கு கருத்தடை செய்ய அறிவுரை வழங்கி உள்ளனர். அதற்கு அந்தக் கணவர் தனக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொள்ள விருப்பமில்லை எனவும் தனது மனைவியும் கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய மாட்டார் என உறுதியுடன் தெரிவித்து இருக்கிறார் .
இதற்கு முன்பும் எட்டு முறை மாவட்ட அதிகாரிகள் அந்த நபரிடம் கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொள்ள அறிவுறுத்தியும் அவர் செய்து கொள்ளவில்லை என தெரிகிறது. வேலூர் மாவட்ட அதிகாரிகள் ஊருக்குள் வருகிறார்கள் என்றால் இவர் காட்டிற்குள் சென்று ஒளிந்து விடுவார். இந்நிலையில் எந்த அறிவிப்பும் இல்லாமல் அவரைச் சந்தித்த மருத்துவர் குழு கருத்தடை அறுவை சிகிச்சையின் நன்மைகளை அவருக்கு எடுத்துரைத்திருக்கிறது. மேலும் தொடர்ந்து குழந்தை பெற்றுக் கொள்வதால் அவரது மனைவியின் உடல் நலம் மிகவும் பாதிக்கப்படும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து அந்த நபர் கருத்தடை செய்து கொள்ள சம்பாதித்து இருக்கிறார். இதனைத் தொடர்ந்து ஒரு வாரத்திற்கு தேவையான மளிகை பொருட்களை மருத்துவக் குழு அவர்களுக்கு வாங்கி கொடுத்து இரண்டு ஆஷா ஊழியர்களையும் அந்த பெண்ணிற்கு பாதுகாப்பாக இருக்க வைத்துவிட்டு அவரது கணவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று நவீன கருத்தடை அறுவை சிகிச்சை செய்து அதற்கான ஊக்கத் தொகையும் அவருக்கு வழங்கி பாதுகாப்பாக அவரது வீட்டில் கொண்டு விட்டு வந்திருக்கின்றனர்.