fbpx

#FIFA2022 :அர்ஜென்டினா கோப்பையை வென்றாலும் மக்கள் மனதில் நாயகனான எம்பாப்பே….

22-வது உலகக்கோப்பை கால்பந்து போட்டி அரபு நாடான கத்தாரில் கடந்த ஒரு மாத காலமாக நடந்து வந்தது. 32 நாடுகள் கலந்து கொண்ட இந்த கால்பந்து திருவிழாவில் நேற்றிரவு அர்ஜென்டினாவும் நடப்பு சாம்பியன் பிரான்சும் இறுதி ஆட்டத்தில் மோதின. விறு விறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் அர்ஜென்டினாவின் ஆதிக்கமே இருந்தது. 23வது நிமிடத்தில் முதல் கோல், 36வது நிமிடத்தில் 2வது கோல் என 2-0 என்று ஆதிக்கம் செலுத்தியது அர்ஜென்டினா.

உலக கோப்பை கால்பந்து இறுதி ஆட்டத்தில் முதல் பாதியில் 1 கோல் கூட அடிக்காத முதல் அணி பிரான்சு என்ற போதிலும், நம்பிக்கையை இழக்காமல் போராடியது, 80வது நிமிடத்தில் பெனால்டி ஷாட் மூலம் கோல் அடித்தார் பிரான்சு நம்பிக்கை வீரர் எம்பாப்பே, அடுத்த நிமிடமே இரண்டாவது கோலும் அடித்து அர்ஜென்டினா அணியை பதறவைத்தார். வழக்கமான 90 நிமிடங்கள் முடிவில் ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையை எட்டியது.

இதையடுத்து தலா 15 நிமிடங்கள் வீதம் மொத்தம் 30 நிமிடங்கள் கூடுதல் நேரமாக ஒதுக்கப்பட்டது. கூடுதல் நேரத்தில் 108வது நிமிடத்தில் மெஸ்சி கோல் அடிக்க அர்ஜென்டினாவின் உலகக்கோப்பை கனவு நிறைவேறும் என்ற நினைப்பை மீண்டும் எம்பாப்பே தகர்த்தார். 118-வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பில் எம்பாப்பே கோல் போட்டார். எப்போதெல்லாம் அர்ஜென்டினாவின் ஆதிக்கம் ஓங்கினாலும் போராடி தடுத்தார் 23 வயதான எம்பாப்பே, உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் ‘ஹாட்ரிக்’ கோல் என்ற மகத்தான சாதனையையும் படைத்தார்.

கூடுதலான 30 நிமிடத்திலும் 3-3 என்ற கணக்கில் சமன் ஆனதால் போட்டியில் பெனால்டி ஷூட்-அவுட் முறை கொண்டு வரப்பட்டது. இதில் அர்ஜென்டினா தங்களுக்கு வழங்கப்பட்ட முதல் 4 வாய்ப்புகளையும் கோலாக மாற்றியது. அதே சமயம் பிரான்சு தனது 4 வாய்ப்புகளில் 2-ஐ வீணடித்தது. 4-2 என்ற கணக்கில் அர்ஜென்டினா அணி கோப்பையை தட்டி சென்றது. அர்ஜென்டினா அணி உலககோப்பையை வெல்வது இது 3-வது முறையாகும். இதற்கு முன்பு 1978 மற்றும் 1986-ம் ஆண்டுகளில் வென்று இருந்தது. மகுடம் சூடிய அர்ஜென்டினாவுக்கு ரூ.342 கோடியும், 2வது இடத்தை பிடித்த பிரான்சுக்கு ரூ.244 கோடியும் பரிசுத்தொகையாக கிடைத்தது.

உலக கோப்பை 2022ஐ அர்ஜென்டினா அணி வென்றாலும், அனைத்து கால்பந்து ரசிகர்கள் மனதையும் வென்றது பிரான்சு நாட்டை சேர்ந்த 23 வயதான எம்பாப்பேஎன்றே கூறலாம். இந்த உலக கோப்பையில் மட்டும் 8 கோல் அடித்துள்ளார் எம்பாப்பே, அதிக கோல் அடித்ததால் தங்க ஷூ-வை தட்டி சென்றார். மெஸ்சி 7 கோல்களுடன் 2-வது இடத்தை பெற்றார். அதே சமயம் ஒட்டுமொத்தத்தில் சிறப்பாக செயல்பட்டதற்கான சிறந்த வீரருக்குரிய தங்க பந்து விருதை மெஸ்சி தட்டிச் சென்றார். சிறந்த இளம் வீரருக்கான விருதை அர்ஜென்டினாவின் மிட் பீல்டர் என்சோ பெர்னாண்டஸ் வென்றார், சிறந்த கோல்கீப்பருக்கான கோல்டன் க்ளோவ் விருதை எமி மார்டினெஸ் வென்றார்.

Kathir

Next Post

பரபரப்பு...! பா.ஜ.க நிர்வாகி மீது கொடூர தாக்குதல்...! மருத்துவமனை விரைந்த அண்ணாமலை...!

Mon Dec 19 , 2022
மர்ம நபர்களால் வெட்டப்பட்ட பாஜக நிர்வாகியை மாநில தலைவர் அண்ணாமலை நேரில் சென்று நலம் விசாரித்தார். செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுகுன்றம் பகுதியில் கஞ்சா புழக்கம் அதிகமாக இருப்பதாக தனது முகநூல் பக்கத்தில் வீடியோவை பா.ஜ.க நிர்வாகி துரை தனசேகர் பதிவிட்டுள்ளார். திருக்கழுகுன்றம் காவல் நிலையத்திற்க்கு பா.ஜ.க நிர்வாகி தனசேகர் மற்றும் கஞ்சா வியாபாரம் செய்யும் நான்கு பேரை விசாரணைக்கு அழைத்துள்ளனர். இரு தரப்பினரையும் விசாரணை செய்தனர். விசாரணை முடிந்த பின்னர் […]

You May Like