சென்னை கே.கே.நகரில் முனிசாமி சாலையில் உள்ள டி.பி.எஸ் வங்கி ஏ.டி.எம் மையத்தில் கடந்த 27ஆம் தேதி இரவு வந்த மர்ம நபர்கள் சிலர், பெரிய கற்களால் ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர். இதனை ஹைதரபாத்தில் இருந்து சிசிடிவி மூலம் பார்த்துக் கொண்டிருந்த அந்த வங்கியின் அதிகாரிகள் சென்னை கே.கே.நகர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து, ரோந்து போலீசார் ஏ.டி.எம். மையம் அருகே வந்த போது அந்த மர்ம நபர்கள் தப்பிச் சென்றனர். இது குறித்து போலீசார் சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.
சென்னை கேகே நகரில் தனியார் வங்கி ஏடிஎம் இயந்திரத்தை கல்லை போட்டு உடைத்து
கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட உணவு டெலிவரி செய்யும் நபரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். அந்த நபர் சென்னை எம்.ஜீ.ஆர் நகரைச் சேர்ந்த அசோக் என்பதும் அவர் மது அருந்த பணம் இல்லாததால் ஏ.டி.எம் இயந்திரத்தை கல்லால் உடைத்து கொள்ளை அடிக்கலாம் என எண்ணியதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார். அசோக் கொள்ளை அடிக்க முயற்சி செய்த சி.சி.டி.வி காட்சி தற்போது வெளியாகியுள்ளது. அதில் கல்லால் இயந்திரத்தை உடைக்கும் காட்சி பதிவாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.