1 முதல் 5-ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை செப்டம்பர் 15-ம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.
அரசு பள்ளிகளில் 1-5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலை நேர சிற்றுண்டி வழங்கப்படும் என்ற அறிவிப்பை முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த மே மாதம் சட்டப்பேரவையில் வெளியிட்டார்.. இந்நிலையில் அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டத்திற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது..
அதன்படி அனைத்து பள்ளி நாட்களிலும் காலை உணவு வழங்க வேண்டும்.. மேலும் ஒவ்வொரு வாரத்திலும் குறைந்தது 2 நாட்களிலாவது, அந்த பகுதிகளில் விளையும் சிறுதானியங்கள் அடிப்படையில் சிற்றுண்டி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டன..
இந்த திட்டத்தினை திறம்பட செயல்படுத்திட ஏதுவாக, திரு.க. இளம்பகவத், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின், திட்ட ஒருங்கிணைப்பு அலுவலராக நியமிக்கப்பட்டார்..
இந்நிலையில் காலை உணவுத் திட்டத்தை செப்டம்பர் 15-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. இதன் மூலம் 1545 தொடக்க பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கு மாணவர்களுக்கு முதல் கட்டமாக காலை சிற்றுண்டி வழங்கப்பட உள்ளது.. இத்திட்டம் பின்னர் படிப்படியாக விரிவுபடுத்தப்பட உள்ளது..