மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் வாயிலாக இலவச உடற்தகுதி தேர்விற்கான பயிற்சி 09.10.2023 அன்று காலை 7 மணியளவில் மாவட்ட விளையாட்டு மைதானம் அப்பாவு நகர் பிடமனேரியில் தொடங்கப்படவுள்ளது. இப்பயிற்சி சிறந்த வல்லுநர்களைக் கொண்டு நடத்தப்பட உள்ளது என தருமபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது செய்தி குறிப்பில்; தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால் (TNUSRB) சார்பு ஆய்வாளர் பணிகளுக்கான எழுத்துத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் அடுத்த கட்டமாக உடல் திறன் தேர்விற்கு தயாராக வேண்டியுள்ளது. இவர்களுக்கு உதவும் வகையில் தருமபுரி, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் வாயிலாக இலவச உடற்தகுதி தேர்விற்கான பயிற்சி 09.10.2023 அன்று காலை 7.00 மணியளவில் தருமபுரி மாவட்ட விளையாட்டு மைதானம் அப்பாவு நகர் பிடமனேரியில் தொடங்கப்படவுள்ளது.
இப்பயிற்சி சிறந்த வல்லுநர்களைக் கொண்டு நடத்தப்பட உள்ளது, இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பமும் தகுதியும் உள்ள நபர்கள் 04342-296188 என்ற தொலைபேசி எண்ணில் அல்லது கீழ்க்கண்ட கூகுள் லிங்கில் https://rb.gy/i89rw தங்களது விவரங்களை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். தருமபுரி, மாவட்டத்தைச் சார்ந்த தகுதி வாய்ந்த நபர்கள் இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.