சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த கோகுல்ராஜ் கடந்த 2015ஆம் வருடம் மாணவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மதுரை நீதிமன்றம் தீரன் சின்னமலை பேரவை தலைவர் யுவராஜ் உள்ள்ளிட்ட 10 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.
இந்த தீர்ப்பை எதிர்க்கும் விதமாக 10 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அதன் பிறகு இந்த வழக்கிலிருந்து 5️ பேர் விடுவிக்கப்பட்டதை எதற்கும் விதமாக, கோகுல்ராஜின் தாயார் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார்.
இந்த மனுக்களை நீதிபதிகள் எம் எஸ் ரமேஷ் மற்றும் ஆனந்த் வெங்கடேஷ் உள்ளிட்டோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. உயர்நீதிமன்ற கிளையில் விசாரிக்கப்பட்ட இந்த வழக்கு நீதிபதிகள் இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட பிறகு சென்னையில் விசாரிக்கப்பட்டது. மதுரையில் விசாரணை நடந்த போது இந்த வழக்கில் முக்கிய சாட்சியான சுவாதி நீதிமன்றத்திற்கு வரவழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டார்.
இத்தகைய நிலையில், எல்லா தரப்பு வாதங்களும் நிறைவடைந்த சூழ்நிலையில், மனுக்கள் மீதான தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். இந்த நிலையில் இந்த மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு இன்று வழங்கப்பட்டிருக்கிறது. அதன் கோகுல்ராஜ் கொலை வழக்கு தீரன் சின்னமலை பேரவை தலைவர் யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு சிறப்பு நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனையை உறுதி செய்ததை தொடர்ந்து யுவராஜ் மேல் முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது