fbpx

மக்களுக்கு குட் நியூஸ்..!! பிப்.12 முதல் தங்க பத்திரங்கள் விற்பனை.! முழு விவரங்கள் இதோ.!

நாம் சம்பாதிக்கும் பணத்தை சேமித்து வைத்திருப்பது ஓடு அதனை ஏதேனும் ஒரு திட்டத்தில் அல்லது தங்கத்தில் முதலீடு செய்தால் எதிர்காலத்தில் நமக்கு நல்ல லாபம் கிடைப்பதோடு வருங்கால சேமிப்பிற்கும் உதவும். மேலும் எதிர்காலத்திற்கு உத்தரவாதமாகவும் அது அமையும்.

மேலும் நமது முதலீட்டை தங்கத்தில் செய்வது அதிக லாபம் தரக்கூடிய ஒன்றாகும். ஏனெனில் தங்கத்தின் விலை எப்போதும் ஏறுமுகமாக இருந்து வருகிறது. இதனால் தங்கத்தில் முதலீடு செய்வதால் தேவைப்படும் நேரத்தில் அவற்றை விற்று பணமாக மாற்றிக் கொள்ள முடியும். தங்கத்தில் முதலீடு செய்யும் போது ஆபரணங்களில் முதலீடு செய்யாமல் தங்க பத்திரங்களில் முதலீடு செய்வது அதிக லாபம் தரும் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
.
முதலீடு செய்பவர்கள் ஆபரண நகைகளில் முதலீடு செய்யும் போது அவற்றிற்கு சி கூலி மற்றும் சேதாரம் போன்ற உபரி செலவுகள் அதிகமாகும். இதற்கு பதிலாக தங்க பத்திரங்களில் முதலீடு செய்யலாம். இதன் மூலம் அதிக லாபமும் கிடைக்கும். நிறைய பணமும் சேமிக்கலாம். மேலும் இவ்வாறு வாங்கும் தங்க பத்திரங்களுக்கு சிறப்பு வட்டியும் தருகிறது அரசு.

நீங்கள் தங்கத்தில் முதலீடு செய்ய விரும்பினால் பிப்ரவரி 12-ம் தேதி முதல் 16ஆம் தேதி வரை வங்கி மற்றும் தபால் நிலையங்களில் தங்க பத்திரங்கள் வாங்கலாம். 24 கேரட் மதிப்பில் இந்த பத்திரங்கள் விற்பனை செய்யப்படுகிறது. இவற்றிற்கு ஒரு கிராம் விலை ரூ.6,243 /- ஆக அரசு நிர்ணயித்துள்ளது. மேலும் இதனை ஆன்லைன் மூலமாக வாங்குபவர்களுக்கு 50 ரூபாய் தள்ளுபடியும் கொடுக்கிறது.

Next Post

"1 ரூபாய் கொடுத்தால் 29 காசு தான் கிடைக்குது.." "இந்தியாவின் 'நம்பர் 1' மாநிலமாக தமிழ்நாடு" - கோவை விழாவில் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்.!

Sun Feb 11 , 2024
தமிழ்நாடு இந்தியாவின் முகமாக இருப்பதாக கோவையில் நடைபெற்ற விழாவில் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். கோவை மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளுக்கு குடிநீர் அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் கூட்டுக் குடிநீர் திட்டங்கள் 780 கோடி ரூபாய் மதிப்பில் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டங்களை துவக்கி வைக்க கோவை சரவண பட்டியில் நடைபெற்ற விழாவில் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். அவருடன் நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் […]

You May Like