fbpx

குரூப் 4 தேர்வர்களுக்கு செம குட் நியூஸ்..!! காலிப்பணியிடங்கள் அதிகரிப்பு..!! டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு..!!

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான காலிப் பணியிடங்கள் 7,301-ல் இருந்து 10,117 ஆக உயர்ந்துள்ளதால், தேர்வர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் 4 தேர்வு கடந்தாண்டு ஜூலை மாதம் 24 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை 18.5 லட்சம் பேர் எழுதினர். இதற்கான முடிவுகள் பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டும் என்று அறிவிக்கப்படிருந்தது. ஆனால், இன்று வரை முடிவுகள் வெளியிடப்படவில்லை. இம்மாத இறுதிக்குள் குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

இந்நிலையில், குரூப் 4 தேர்வுக்கான திருத்தி அமைக்கப்பட்ட காலிப்பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. அதன்படி, வி.ஏ.ஓ காலி பணியிடங்களுக்கான எண்ணிக்கை 274-ல் இருந்து 425 ஆக உயர்ந்துள்ளது. இளநிலை உதவியாளருக்கான காலிப்பணியிடங்கள் 4,952 ஆக உயர்ந்துள்ளது. மேலும், ஜூனியர் இன்ஜினியர், பில் கலெக்டருக்கான காலிப்பணியிடங்கள் 163-ல் இருந்து 252 ஆக அதிகரித்துள்ளது. மொத்தமாக குரூப் 4 காலிப் பணியிடங்களுக்கான எண்ணிக்கை 7,301-ல் இருந்து 10,117 ஆக உயர்ந்துள்ளது. இதனால் குரூப் 4 தேர்வு எழுதியவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Chella

Next Post

தொடரை வெல்லப்போவது யார்..? சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா இன்று பலப்பரீட்சை..!!

Wed Mar 22 , 2023
இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்ரேலிய அணி ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து, நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் […]

You May Like