fbpx

பெண்களே நற்செய்தி.. ஒரே நாளில் ரூ.800 குறைந்த தங்கம் விலை…

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.43,760-க்கு விற்பனையாகிறது..

உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது.. இந்த நிலையில் அமெரிக்காவில் 2 வங்கிகள் திவாலானதை அடுத்து பாதுகாப்பு கருதி, முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.. அந்த வகையில் புதிய உச்சமாக ஒரே நாளில் சவரனுக்கு ரூ.880 உயர்ந்தது..

இந்த நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது.. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.100 குறைந்து ரூ.5,470-க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.43,760-க்கு விற்பனையாகிறது.. இதே போல் வெள்ளியின் விலையும் இன்று குறைந்துள்ளது.. ஒரு கிராம் வெள்ளி விலை 70 காசுகள் குறைந்து ரூ.74க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.74,000க்கு விற்பனையாகிறது.

Maha

Next Post

ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டால் மரண தண்டனை.. புதிய சட்டம் நிறைவேற்றம்.. எந்த நாட்டில் தெரியுமா..?

Wed Mar 22 , 2023
உகாண்டாவில் ஓரினச்சேர்க்கைக்கு எதிரான புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.. உகாண்டா உட்பட 30 க்கும் மேற்பட்ட ஆப்பிரிக்க நாடுகள் ஏற்கனவே ஓரினச்சேர்க்கை உறவுகளை தடை செய்துள்ளன. இந்நிலையில் உகாண்டா பாராளுமன்றத்தில் ஓரினச்சேர்க்கைக்கு எதிரான என்ற புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.. அதன்படி லெஸ்பியன், ஓரினச்சேர்க்கை, இருபாலினம், திருநங்கைகள் மற்றும் விசித்திர பாலின உறவுகள் சட்ட விரோதமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. ஓரினச்சேர்க்கை மட்டுமின்றி, ஓரினச்சேர்க்கையை ஊக்குவிப்பது மற்றும் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவதற்கான சதித்திட்டம் ஆகியவற்றை இந்த […]

You May Like