fbpx

விடைபெற்றது வடகிழக்கு பருவமழை!… வானிலை மையம் அறிவிப்பு!

வடகிழக்கு பருவமழை தமிழ்நாடு, புதுவை, காரைக்கால், அதனை ஒட்டிய கடலோர ஆந்திரா, ராயலசீமா, தெற்கு உள் கர்நாடகா மற்றும் கேரளா பகுதிகளில் இருந்து விலகியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இந்தாண்டு வடகிழக்கு பருவமழை வட மற்றும் தென் மாவட்டங்களை புரட்டிப்போட்டது. வரலாறு காணாத அளவிற்கு மழை பெய்து மக்களை வாட்டி வதைத்தது. பெரும்பாலான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. கடந்த 3 மாதங்களாக வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வடகிழக்கு பருவமழை தமிழ்நாடு, புதுவை, காரைக்கால், அதனை ஒட்டிய கடலோர ஆந்திரா, ராயலசீமா, தெற்கு உள் கர்நாடகா மற்றும் கேரளா பகுதிகளில் இருந்து நேற்று விலகியதாக தெரிவித்துள்ளது. நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் வரும் 18ம் தேதிமுதல் 20ம் தேதிவரை தென் தமிழக பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Kokila

Next Post

தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் அண்ணாமலை!… ரஜினியின் ரகசியத்தை உடைத்த துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி!

Mon Jan 15 , 2024
தமிழக பாஜக தலைவராக உள்ள அண்ணாமலை தான் தமிழ்நாட்டின் முதலமைச்சராக வர வேண்டும் என பல ஆண்டுகளுக்கு முன்பே நடிகர் ரஜினிகாந்த் கூறியதாக துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி தெரிவித்தார். துக்ளக் பத்திரிகையின் 54-வது ஆண்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். அப்போது பேசிய துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி, அண்ணாமலையை பற்றி இந்த நேரத்தில் நான் சொல்லியே […]

You May Like