fbpx

இனி அரசு ஊழியர்கள் ஜீன்ஸ், லெகின்ஸ் அணியத் தடை..!! ஊடகவியலாளர்களுக்கும் கட்டுப்பாட்டு..!!

தலைமைச் செயலகத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் அனைவருக்கும் ஆடைக் கட்டுப்பாடு விதித்து அசாம் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தலைமைச் செயலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் ஜீன்ஸ், டி-சர்ட் மற்றும் லெகின்ஸ் அணிவதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆண்கள் இனி சட்டை மற்றும் பேண்ட் அணிய வேண்டும் என்றும் பெண்கள் புடவை மற்றும் சல்வார்-கமீஸ் அணியலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு புதன்கிழமையும் ஊழியர்கள் பாரம்பரிய ஆடைகளை அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அம்மாநில சட்டமன்ற சபாநாயகர் பிஸ்வஜித் டைமாரியின் உத்தரவின் பேரில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இனி அரசு ஊழியர்கள் ஜீன்ஸ், லெகின்ஸ் அணியத் தடை..!! ஊடகவியலாளர்களுக்கும் கட்டுப்பாட்டு..!!

அதன்படி தினசரி ஊதியம் மற்றும் நிலையான ஊதியத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் இது பொருந்தும் என்றும் அறிவுறுத்தல்களைக் கடைபிடிக்கத் தவறும் மாநில சட்டசபை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. சட்டசபை கூட்டத்தொடரின் போது, ஊழியர்களுக்கு சீருடையும் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சட்டசபை நடவடிக்கைகளை பதிவு செய்யும் ஊடகவியலாளர்களும் இனி அரசாங்க வழிகாட்டுதல்படிதான் ஆடைகளை அணிய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

இந்திய விமானப்படையில் சேர விருப்பமா..? சம்பளம் எவ்வளவு தெரியுமா? மிஸ் பண்ணிடாதீங்க..!!

Tue Nov 8 , 2022
இந்திய விமானப்படையில் அக்னிபாத் திட்டத்தின் கீழ் 01/2023-க்கு அக்னி வீர் வாயு (AGNIVEERVAYU) பிரிவில் ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. திருமணமாகாத ஆண்கள் மற்றும் பெண்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பணியின் முழு விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்கும் முறையை இதில் தெரிந்துகொள்ளுங்கள். இந்திய விமானப்படை வேலைவாய்ப்பு விவரங்கள்: பணியின் பெயர்: Agniveer விமானப்படை வீரர்கள் வயது வரம்பு: அதிகபட்சம் 21 வயது இருக்க வேண்டும். சம்பளம்: முதல் வருடம் […]

You May Like