fbpx

’இவன் என்னை கெடுத்து விட்டான்’..!! ’முதல்வரின் மகனாக இருந்தாலும் எனக்கு பயமில்லை’..!! நடிகை சுஜிதா பகீர் தகவல்..!!

விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனம் என்ற கதாபாத்திரத்தில் ஆரம்பம் முதல் இறுதி வரை நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றவர் நடிகை சுஜிதா. மறுபக்கம் சினிமாவிலும் அவ்வப்போது தன்னுடைய பங்களிப்பை கொடுத்து வருகிறார். சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட இவர், சமுதாயத்தில் பெண்களுக்கு இழைக்கப்படக்கூடிய அநீதிகள் குறித்து பேசி இருக்கிறார்.

அதாவது, ”பெண்கள் என்றாலே பலவீனமானவர்கள் என்ற ஒரு கருத்தை சமுதாயத்தில் கட்டமைத்து வைத்திருக்கிறார்கள். உதாரணத்திற்கு ஒரு ஆண் அழுகிறார் என்றால் நீ என்ன பொம்பள மாதிரி அழுதுட்டு இருக்க என்று கேட்கிறார்கள். ஏன் பெண்கள் மட்டும் தான் அழ வேண்டுமா..? ஆண்கள் அழக்கூடாதா..? அது என்ன பொம்பள மாதிரி அழுதுட்டு இருக்க என்று பெண்களை பலவீனமானவர்கள் என்பது போன்ற ஒரு பிம்பத்தை உருவாக்க முயல்வது.

பெண்கள் தைரியமாக இருக்க வேண்டும். ஒருவன் உங்களிடம் பாலியல் ரீதியாக தொல்லை கொடுக்கிறான்.. உங்களை கெடுத்து விட்டான் என்றால் கூட அதனை வெளிப்படையாக பொது வழியில் சொல்லிப் பழக வேண்டும். இவன் என்னை கெடுத்து விட்டான் என்று பொதுவெளியில் வெளிப்படையாக கூறுங்கள். தவறே கிடையாது. அவன் முதலமைச்சர் மகனாக இருந்தாலும் சரி.. எனக்கு பயமில்லை.. பிரதமரின் மகனாக இருந்தாலும் சரி.. எனக்கு பயமில்லை.. எவனாக இருந்தாலும் ஒரு பெண் மீது கை வைத்தால் தண்டனை உண்டு.

நான் இதை செய்தால், அவள் வெளியே சொல்லிவிடுவாள் என்ற பயம் ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும். அப்போதுதான் இப்படியான குற்றங்கள் குறையும் என பேசி இருக்கிறார் நடிகை சுஜிதா.

Chella

Next Post

இன்னைக்கு இந்த 4 மாவட்டங்கள் தான் டார்கெட்..!! புரட்டி எடுக்கப்போகும் கனமழை..!!

Tue Dec 12 , 2023
தமிழ்நாட்டில் இன்று 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.இதன் காரணமாக இன்று (டிச.12) தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய […]

You May Like