கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள இந்து கோவில் அதன் முன் வாயில் மற்றும் சுவரில் காலிஸ்தானிக்கு ஆதரவான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு சேதப்படுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள சர்ரே நகரில் உள்ள லட்சுமி நாராயண் மந்திரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சமிபத்தில் கனடாவின் ஒன்டாரியோவில் உள்ள மற்றொரு இந்து கோவில் இந்தியாவிற்கு எதிரான சுவரொட்டிகளால் சிதைக்கப்பட்டதை அடுத்து இந்த சம்பவம் நடந்துள்ளது.
லக்ஷ்மி நாராயண் மந்திர் வாயிலில் இரண்டு பேர் சுவரொட்டிகளை ஒட்டும் சிசிடிவி காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவத்தை அறிந்த கோவில் ஊழியர்கள் உடனடியாக போஸ்டர்களை அகற்றினார் இது சம்பந்தமாக அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர்.