இன்று இரவு 8:45 மணி அளவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து தனி விமானத்தின் மூலமாக சென்னைக்கு வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இரவு 9.05 மணி அளவில் கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா விடுதிக்கு சென்று ஓய்வு எடுக்கிறார். அதன் பிறகு இரவு 9:45 மணி அளவில், பாஜக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களை அவர் சந்திக்கிறார் அதேபோல நாளை காலை 11 40 மணியளவில் வேளச்சேரியில் தென் சென்னை பாஜக நிர்வாகிகளில் அவர் சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.
அதன் பிறகு பகல் 1:45 மணி அளவில் சென்னையிலிருந்து ஹெலிகாப்டர் மூலமாக வேலூருக்கு செல்கிறார். பகல் 2 45 மணியளவில் வேலூர் பள்ளிகொண்டாவில் நடைபெறும் பொதுக் கூட்டத்திலும் அவர் உரையாற்ற உள்ளார். பிறகு மாலை 3:55 மணி அளவில் ஹெலிகாப்டர் மூலமாக சென்னைக்கு திரும்பும் அவர், நாளை மாலை 5:50 மணி அளவில் தனி விமான மூலமாக விசாகப்பட்டினத்திற்கு புறப்படுகிறார்.
இன்று சென்னைக்கு வரும் அமித்ஷாவை அதிமுகவின் பொதுச்செயலாளரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி சந்திக்க மாட்டார் என்று தகவல் கிடைத்திருக்கிறது. கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்கும் அமித்ஷா கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து ஆலோசிக்க உள்ளார்.
எடப்பாடி பழனிச்சாமி சில தனிப்பட்ட காரணங்களால் சேலத்தில் தங்கி இருப்பார் எனவும் அதன் காரணமாக, அவர் அமைச்சவை சந்திப்பதற்கான வாய்ப்பில்லை என்றும் தகவல் கிடைத்திருக்கிறது. அதே சமயம் சிலர் தினங்களாக இருந்த பன்னீர்செல்வம் சென்னை திரும்பி இருக்கிறார் ஆனால் அவரும் அமித்ஷாவை சந்திப்பதற்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளதாகவும் சொல்லப்படுகிறது