ஒரு காலத்தில், எவ்வளவு வயதானாலும், ஒரு மனிதனுக்கு நோய் என்பது வராது இன்னும் சொல்லப்போனால், ஒரு மனிதனுக்கு இறப்பு என்பதே இல்லை என்ற அளவிற்கு இருந்த காலம் போய், தற்போது நோயிலிருந்து நம்மை எப்படி தற்காத்துக் கொள்வது என்பதை மனிதன் தேடி ஓடிக் கொண்டிருக்கிறான்.
அந்த வகையில், சமீப காலமாக நம்முடைய நாட்டில் இளம் வயதிலேயே இதய நோய்கள் ஏற்படுவது வழக்கமாகி வருகிறது. அந்த இதய நோயை தடுப்பது எப்படி? என்பது பற்றி தற்போது நாம் தெரிந்து கொள்ளலாம்.
அதாவது, நம்முடைய உணவோடு சேர்த்து, பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகமாக சாப்பிடுவது, பழுப்பு அரிசி, பார்லி, கோதுமை ஓட்ஸ் போன்ற தானியங்களை உட்கொள்வது இந்த இதய நோயிலிருந்து நம்மை தற்காத்து வைத்திருக்கும்
அதேபோல, வெண்ணெய், பன்னீர், பாலாடை கட்டி,சிவப்பு இறைச்சி, நெய் போன்ற பொருட்களை நாம் சாப்பிடுவதை அறவே நிறுத்த வேண்டும். இறைச்சியில் தோல் இல்லாத, கோழி, மீன் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.
அதே போன்று உப்பை உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்வதையும் நிறுத்த வேண்டும். அதே போல அதிகமாக குறைத்தாலும், சோடியம் குறைவு உண்டாவதற்கான வாய்ப்பு இருக்கிறது. இதில் மருத்துவ நிபுணரின் வழிகாட்டல் மிகவும் அவசியம் என்று சொல்லப்படுகிறது. கொழுப்பு சத்து இல்லாத பால் பொருட்கள், கொட்டைகள், பருப்பு வகைகள் போன்றவற்றை சாப்பிடலாம் என்றும் கூறப்படுகிறது