fbpx

பாதாள சாக்கடை சுத்தம் செய்ய மனிதர்களா..? தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!!

பாதாள சாக்கடைகளில் மனிதர்கள் இறங்கும் நடைமுறையை முழுமையாக ஒழிக்க அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

பாதாள சாக்கடைகளில் மனிதர்களை இறக்குவதைத் தடுக்கும் வகையில், இயந்திரங்களை பயன்படுத்த வேண்டும், பாதாள சாக்கடைகளில் மனிதர்களை இறங்கச் செய்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாதாள சாக்கடைகளில் மனிதர்களை இறக்க தடை விதிக்கும் 2013 சட்டத்தை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும்.

பாதாள சாக்கடைகளில் இறங்கி உயிரிழக்கும் தொழிலாளர்களுக்கான இழப்பீட்டை 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை அதிகரிக்க வேண்டும், பாதாள சாக்கடைகளில் பலியாவோரின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு சபாய் கர்மாச்சாரி அந்தோலன் என்ற அமைப்பின் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த உத்தரவுகளை அரசு முழுமையாக பின்பற்றும் என நீதிபதிகள் கங்காபூர்வாலா, சத்தியநாராயண பிரசாத் அமர்வு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Read More : ’சோகமா இருந்தா 10 நாட்களுக்கு விடுமுறை’..!! சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட பிரபல நிறுவனம்..!!

Chella

Next Post

வாடிக்கையாளர்களே நோட் பண்ணிக்கோங்க..!! மே மாத வங்கி விடுமுறை நாட்கள் இதோ..!!

Tue Apr 30 , 2024
மே மாதம் தொடங்க உள்ள நிலையில், வங்கிகள் சம்பந்தமான வேலைகள் ஏதும் இருப்பின் வாடிக்கையாளர்கள், ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள விடுமுறை நாட்களை பார்த்து, அதற்கு தகுந்தாற் போல அவர்களின் வேலைகளை திட்டமிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள விடுமுறை நாட்கள் : மே 1 – மே தினம் / மகாராஷ்டிரா ஸ்தாபன நாள் மே 5 – ஞாயிற்றுக்கிழமை மே 7- 3ஆம் கட்ட மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு […]

You May Like