fbpx

“நான் மாட்டிறைச்சி சாப்பிடாத பெருமைமிக்க இந்து” – கங்கனா ரனாவத்

நான் மாட்டிறைச்சி உள்பட எவ்வித இறைச்சியும் உண்டதில்லை என நடிகையும், பாஜக மண்டி தொகுதி வேட்பாளருமான கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.

லோக்சபா தேர்தலில் பாஜக வேட்பாளராக இமாச்சல பிரதேசத்தின் மண்டி தொகுதியில் போட்டியிடுகிறார் கங்கனா ரனாவத். அண்மையில் நாட்டின் முதல் பிரதமர் சுபாஷ் சந்திரபோஸ் என ஒரு பதிலளித்து ஒட்டுமொத்த இந்தியாவையே அதிரவைத்தவர் கங்கனா ரனாவத். இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த சர்ச்சை முடிவதற்குள் கங்கனா ரனாவத்தை மையமாக வைத்து மற்றொரு சர்ச்சை வெடித்தது. 2019 லோக்சபா தேர்தலின் போது கங்கனா ரனாவத் வெளியிட்ட வீடியோ ஒன்றில் தாம் வீட்டை விட்டு வெளியேறிய போது மாட்டிறைச்சி சாப்பிடக் கூடாது என தாயார் தடை விதித்தார். அந்த மாட்டிறைச்சியில் என்னதான் இருக்கிறது என்பதற்காக நான் அதை சாப்பிட்டும் பார்த்தேன். எனக்கு மாட்டிறைச்சி மிகவும் பிடித்திருந்தது என கூறியிருந்தார். அதனை இப்போது காங்கிரஸ் மீண்டும் நினைவூட்டி விமர்சனம் செய்தது.

இதற்கு விளக்கம் தெரிவித்த கங்கனா, இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் “நான் பல ஆண்டுகளாக யோகா, ஆயுர்வேத வாழ்க்கை முறையை பின்பற்றுவதோடு அதை பிறருக்கும் பரிந்துரைத்து வருகிறேன். இப்போது வதந்திகளைப் பரப்பும் முயற்சியால் எனது பிம்பம் சிதையாது. எனது தொகுதி மக்களுக்கு என்னைத் தெரியும். நான் ஒரு பெருமித இந்து என்பதை அவர்கள் அறிவார்கள். எதுவும் என்னைப் பற்றி அவர்கள் தவறாக நினைக்கும்படி செய்யாது. ஜெய் ஸ்ரீ ராம்.” என்று பதிவிட்டுள்ளார்.

Next Post

மக்களவை தேர்தலோடு விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல்..? சத்யபிரதா சாஹூ சொன்ன முக்கிய தகவல்..!!

Mon Apr 8 , 2024
விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினராகவும், விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராகவும் இருந்த புகழேந்தி, காலமானதை அடுத்து விக்கிரவாண்டி தொகுதி காலியாக உள்ளதாக சட்டப் பேரவை செயலகம் தற்போது அறிவித்துள்ளது. இதுதொடர்பான தகவல் தேர்தல் ஆணையத்திற்கும் முறைப்படி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஒரு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து அடுத்த 6 மாத காலத்திற்குள் அங்கு இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது விதி. இந்நிலையில், மக்களவைத் தேர்தலோடு விக்கிரவாண்டிக்கு இடைத் […]

You May Like