நாட்டின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி. அனைத்து தரப்பட்ட மக்களைக் கருத்தில் கொண்டு பல சேமிப்புத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மற்ற தனியார் நிறுவனங்களில் மேற்கொள்ளப்படும் பாலிசிகளை விட அதிக பாதுகாப்பை நமக்கு வழங்கும் என்பதால் பல்வேறு தரப்பினரின் தேர்வாக எல்.ஐ.சி. சேமிப்புத் திட்டம் உள்ளது. இந்த வரிசையில் பாதுகாப்பு மற்றும் சேமிப்பை உறுதி செய்யக்கூடிய ஒரு பாலிசி திட்டமாக உள்ளது தான் எல்.ஐ.சி ஜீவன் லாப் (LIC Jeevan labh.)
இத்திட்டத்தில் இணைவதற்கான குறைந்தபட்ச வயது 18 ஆண்டுகள் மற்றும் அதிகபட்சமாக 59 ஆண்டுகள். பொதுவாக இந்த பாலிசியில் 3 பிளான்கள் உள்ளது. 16 ஆண்டுகள் நீங்கள் பாலிசி எடுத்தால் , 10 ஆண்டுகள் மட்டும் பணம் கட்டினால் போதும். 21 ஆண்டுகால பாலிசி திட்டத்தில் நீங்கள் 15 ஆண்டுகள் மட்டும் பிரீமியத் தொகை செலுத்தினால் போதும். மூன்றாவதாக 25 ஆண்டுகால பாலிசி திட்டத்தில் 16 ஆண்டுகள் நீங்கள் பிரிமீயம் தொகை செலுத்தினால் போதும். நீங்கள் இந்த திட்டத்தின் கீழ், 25 வயதாக இருக்கும் போது, பதிவு செய்தால் ஒரு நாளைக்கு ரூ.252 என்ற விகிதத்தில் முதலீடு செய்தால், ( அதாவது மாதத்திற்கு ரூ.7,572) நல்ல லாபம் பெறக்கூடும். அதாவது நீங்கள் உங்களுடைய முதிர்வு காலத்தில் ரூபாய் 54 லட்சம் வரை பெற முடியும்.