கணவரின் நண்பருடன் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியதால், கள்ள காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை திட்டமிட்டு கொலை செய்த மனைவியை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்து இருக்கிறார்கள்.
இந்த சம்பவம் ஆந்திர மாநிலத்தில் நடைபெற்றுள்ளது ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் (35). இவர் காவல் துறையில் பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி சிவானி (30) இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.
இந்த நிலையில்தான், ரமேஷின் நண்பரான ராமராவ் அவ்வப்போது, ரமேஷின் வீட்டிற்கு வந்து, சென்றுள்ளார். அப்போது ஷிவானி உடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டு, அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறி இருக்கிறது, ஆகவே ரமேஷ் வீட்டில் இல்லாத சமயத்தில், கள்ளக்காதலர்களான இருவரும் அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்ததாக தெரிகிறது.
இவர்களுக்கு இடையிலான கள்ளக்காதல் விவகாரம், ரமேஷுக்கு நாளடைவில் தெரிய வந்ததால், ரமேஷ் தன்னுடைய நண்பரையும், மனைவியையும் கடுமையாக கண்டித்து, எச்சரிக்கை செய்திருக்கிறார். ஆனாலும் இதனை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், இருவரும் பழகி வந்துள்ளனர். இதற்கு நடுவே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவன் ரமேஷை கொலை செய்வதற்கு கள்ளக்காதலர்கள் இருவரும் திட்டமிட்டுள்ளனர்.
அதன் அடிப்படையில், சென்ற 1ம் தேதி அலுவலகத்தில் பணி முடிந்து வீட்டிற்கு வந்த கணவர் ரமேஷுக்கு, அவருடைய மனைவி ஷிவானி அளவு கடந்த மதுவை கொடுத்துள்ளார். இதனால், போதை தலைக்கேறிய நிலையில், சுயநினைவின்றி படுக்கையில் கிடந்த ரமேஷை, முகத்தில் தலையணையை வைத்து, அமுக்கி மனைவி ஷிவானி கொலை செய்திருக்கிறார், அதன் பிறகு எதுவும் தெரியாததை போல, அதற்கு அடுத்த நாள் காலையில், கணவர் மாரடைப்பு காரணமாக, உயிரிழந்து விட்டதாக நாடகமாடி கதறி அழுதுள்ளார்.
இது தொடர்பாக வழங்கப்பட்ட புகாரின் அடிப்படையில், வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், விசாரணையை ஆரம்பித்தனர். இதில் ரமேஷின் மனைவி ஷிவானியின் மீது சந்தேகம் ஏற்பட்டதால், காவல்துறையினர் அவரை விசாரணை செய்தனர். அவருடைய கைபேசியை ஆய்வு செய்ததில், ராமாராவுடன் பலமுறை அவர் பேசியிருப்பது தெரிய வந்துள்ளது.
அதன் பிறகு அவரிடம் கிடுக்குப் பிடி விசாரணை செய்த காவல்துறையினரின் பிடியிலிருந்து தப்ப முடியாது என்பதை தெரிந்து கொண்ட ஷிவானி, கணவரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இந்த கொலை சம்பவம் குறித்து இதுவரையில் மூன்று பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.