fbpx

வேளாண் பட்ஜெட்டில் இடம்பெறவுள்ள முக்கிய அறிவிப்பு..? பாமாயிலுக்கு பதில் இனி இதுதான்..!!

தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் மற்றும் கடலை எண்ணெய் விற்பனை செய்வதற்கு தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் முன்னேற்ற சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மனு அளிக்கப்பட்ட நிலையில், தமிழக வேளாண்மை பட்ஜெட்டில் விவசாயிகளின் பல கோரிக்கைகள் இடம்பெறாமல் உள்ளது.

தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரம் 10 ஆண்டுகளாக பாதித்த தேங்காய்க்கு உரிய விலை கிடைக்காத நிலையில் உள்ளனர். வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் பாமாயிலுக்கு பதில் ரேஷன் கடைகளில் தேங்காய் மற்றும் கடலை எண்ணெய் விற்பனை செய்ய வேண்டும் எனவும் வருகிற வேளாண் பட்ஜெட்டில் இது தொடர்பான அறிவிப்பை இடம்பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

Chella

Next Post

”அண்ணன் எழுந்தாலே எங்களுக்கு மகிழ்ச்சி தான்”..!! செல்லூர் ராஜூவை கலாய்த்த அமைச்சர் சிவசங்கர்..!!

Tue Feb 13 , 2024
சென்னை, கோயம்பேட்டில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில் செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கத்தில் பேருந்து முனையம் அமைக்கப்பட்டது. இதை கடந்த டிச.30ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதையடுத்து, கோயம்பேட்டில் இருந்து இயக்கப்பட்ட 90 சதவீதத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படுகின்றன. இதற்கிடையே, பயணிகளுக்கான வசதிகள் செய்துதரப்படாத நிலையில், அவசர கதியில் பேருந்து நிலையம் தொடங்கப்பட்டுள்ளதாக பல்வேறு தரப்பினரும் விமர்சித்தனர். இந்நிலையில், சட்டமன்றத்தில் கிளாம்பாக்கம் பேருந்து நிலைய விவகாரம் […]

You May Like