fbpx

இந்தியாவில் 10 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை…! உயிரிழப்பு எண்ணிக்கை எவ்வளவு…?

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்று பாதிக்கப்பட்டுள்ளனர் குணமடைந்தவர்கள், இறந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 8,813 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 29 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும் 15,040 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளன.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் மொத்த விவரங்கள்.. நாட்டில் மொத்தம் 4,42,53,464 கோடி பேர் தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போல வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு 4,36,38,844 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தம் 5,27,098 பேர் உயிரிழந்துள்ளனர். இது வரை நாட்டில் 2,08,31,24,694 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 6,10,863 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

இளம் திரைப்பட விமர்சகர் மாரடைப்பால் மரணம்.. பல்வேறு பிரபலங்கள் இரங்கல்...

Tue Aug 16 , 2022
பிரபல திரைப்பட விமர்சகரும் வர்த்தக ஆய்வாளருமான கௌசிக் நேற்று மாரடைப்பால் காலமானார். புகழ்பெற்ற திரைப்பட விமர்சகரான கௌசிக், பிரபல யூ டியூப் சேனலில் வீடியோ ஜாக்கியாகவும் இருந்து வந்தார்.. மேலும் திரைப்படங்களின் பாக்ஸ் ஆபிஸ் உள்ளிட்ட விவரங்களை கணிக்கும் வர்த்தக ஆய்வாளராகவும் இருந்தார்.. தனது திரைப்பட விமர்சனங்கள் மற்றும் தமிழ் திரையுலகைச் சேர்ந்தவர்களை நேர்காணல் செய்ததன் மூலம் பிரபலமானவர் கௌசிக்.. இந்நிலையில் நேற்று அவர் மாரடைப்பால் காலமானார்.. அவருக்கு வயது […]

You May Like