fbpx

#Breaking: 24 மணி நேரத்தில் மட்டும்  புதிதாக 23,563 பேருக்கு வைரஸ்… 2,603 பேர் உயிரிழப்பு…

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்று பாதிக்கப்பட்டுள்ளனர் குணமடைந்தவர்கள், இறந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 23,563 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 2,603 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும் 18, 517 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளன.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் மொத்த விவரங்கள்.. நாட்டில் மொத்தம் 4,38,03,619 கோடி பேர் தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போல வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு 4,31,32,140 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தம் 5,28,388 பேர் உயிரிழந்துள்ளனர். இது வரை நாட்டில் 2,00,61,24,684 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 26,04,797 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் மேலும், கொரோனோ பரவாமல் தடுக்க மக்கள் அரசாங்கம் அறிவுறுத்தியுள்ள நோய் தடுப்பு வழிமுறைகளான.. சமூக இடைவெளியைப் பின்பற்றுதல், முகக்கவசம் அணிதல், கைகளைக் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்தல் போன்றவற்றை பின்பற்ற வேண்டும். அனைவரும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து அதிகரித்து வரும் வைரஸ் பாதிப்பால் மீண்டும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படுமா என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Also Read: 12-ம் வகுப்பு மாணவர்களே துணைத்தேர்வுக்கு… ஆன்லைன் மூலம் இன்று முதல் Hall Ticket…! எப்படி டவுன்லோட் செய்வது…?

Vignesh

Next Post

’மாட்டு வண்டிக்கு 3-வது சக்கரத்தை தயாரித்து மாடுகளின் பாரத்தை குறைத்த மாணவர்கள்’..! குவியும் பாராட்டு

Wed Jul 20 , 2022
மாடுகளின் பாரத்தை குறைக்கும் வகையில் மாட்டு வண்டியில் 3-வது சக்கரத்தை தயாரித்த மாணவர்களை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர் . மகாராஷ்டிர மாநிலம் ராஜாராம் நகரில் ராஜாராம்பாபு இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரி செய்யப்பட்டு வருகிறது. இந்த பகுதியில் கரும்பு செழிப்பாக வளர்வதால் விவசாயிகள் மாட்டு வண்டியில் கரும்பை ஏற்றி சர்க்கரை ஆலைக்கு கொண்டு வருவது வழக்கம். இதனைக் கண்ட அந்த கல்லூரி மாணவர்கள் விவசாயிகள் மாட்டு வண்டியில் கரும்பை […]
’மாட்டு வண்டிக்கு 3-வது சக்கரத்தை தயாரித்து மாடுகளின் பாரத்தை குறைத்த மாணவர்கள்’..! குவியும் பாராட்டு

You May Like