fbpx

அனைத்து வன்முறைச் செயல்களையும் இந்தியா கண்டிக்கிறது.. ஜப்பான் குண்டுவெடிப்பு குறித்து பிரதமர் மோடி ட்வீட்..

ஜப்பான் பிரதமர் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்..

ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா பங்கேற்ற பொது நிகழ்ச்சியில் குண்டுவெடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.. உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் கட்சி வேட்பாளரை ஆதரித்து ஃபுமியோ கிஷிடா வாகயாமா மாகாணத்தில் உள்ள சைகாசாகி துறைமுகத்திற்குச் சென்றார்.. அங்கு அவர் உரையாற்றிக் கொண்டிருந்த போது, அவரை நோக்கி மர்ம பொருள் ஒன்று விழுந்தது.. எனினும் அது சற்று முன்னரே விழுந்து பெரும் சத்தத்துடன் வெடித்தது.. இதில் பிரதமர் கிஷிடா நல்வாய்ப்பாக உயிர் தப்பினார்..

உடனடியாக பாதுகாவலர்கள் பிரதமர் கிஷிடாவை சூழ்ந்து கொண்டு அங்கிருந்து அவரை மீட்டு காப்பாற்றி பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சேர்த்தனர். இதையடுத்து சந்தேக நபர் என்று நம்பப்படும் ஒரு நபர் சம்பவ இடத்தில் கைது செய்யப்பட்டார்.. எனினும் இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.. பிரதமர் கிஷிடா பாதுகாப்பாக உள்ளதாகவும் பாதுகாப்பு அதிகாரிகள் உறுதிபடுத்தியுள்ளனர்.

முன்னாள் ஜப்பான் பிரதமர், ஷின்ஷோ அபே 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் பொதுக்கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்த போது சுட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த சூழல் ஜப்பான் பிரதமர் குறிவைக்கப்பட்ட சம்பவம் அந்நாட்டில் மட்டுமல்லாது சர்வதேச அளவிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் பிரதமர் மோடி, ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடா ஆறுதல் தெரிவித்துள்ளார்.. மேலும், அனைத்து வன்முறைச் செயல்களையும் இந்தியா கண்டிக்கிறது என்று வலியுறுத்தினார். பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில், “ஜப்பானில் உள்ள வகயாமாவில் நடந்த பொது நிகழ்ச்சியில் எனது நண்பர் பிரதமர் ஃபுமியோ கிஷிடா கலந்துகொண்டபோது நடந்த வன்முறை சம்பவம் குறித்து அறிந்தேன். அவர் பாதுகாப்பாக இருக்கிறார் என்று நிம்மதி அடைந்தேன். அவர் தொடர்ந்து நல்வாழ்வு மற்றும் நல்ல ஆரோக்கியத்திற்காக பிரார்த்தனை செய்கிறேன். அனைத்து வன்முறைச் செயல்களையும் இந்தியா கண்டிக்கிறது..” என்று குறிப்பிட்டுள்ளார்..

Maha

Next Post

காலை 12 மணி முதல் மதியம் 3 மணி வரை வெளியே செல்ல வேண்டாம்... வானிலை மையம் அட்வைஸ்...

Sat Apr 15 , 2023
வரும் நாட்களில் கோடை வெப்பம் அதிகரிக்கும் என்பதால், அதில் இருந்து தற்காத்து கொள்வதற்கான வழிமுறைகளை வானிலை மையம் வெளியிட்டுள்ளது.. நாடு முழுவதும் கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது.. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.. இந்நிலையில் ஏப்ரல் முதல் இந்தியாவின் பல இடங்களில் இயல்பான வெப்ப அலை ஏற்படக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) தெரிவித்துள்ளது. கோடை காலமாக […]

You May Like