fbpx

தமிழகம் அமைதிப் பூங்காவா..? ஹெச்.ராஜா ட்விட்டரில் கேள்வி…

பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தமிழகம் அமைதிப்பூங்காவா என்று ட்விட்டரில் கேள்வி எழுப்பி உள்ளார்.

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெற்று வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. கோவை, கன்னியாகுமரி, மதுரை, ராமநாதபுரம், திருப்பூர், சேலம், தாம்பரம் உள்ளிட்ட இடங்களில் பாஜக மற்றும் இந்து முன்னணி பிரமுகா் வீடுகள், கடைகள் மீது பெட்ரோல் குண்டு வீசும் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இதனால், தமிழ்நாடு முழுவதும் உள்ள பெட்ரோல் பங்குகளில் பாட்டில், கேன்களில் பெட்ரோல், டீசல் வழங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது..

இதனால் இந்த பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவி வருவதால் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை விடுத்தார். பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் தொடர்பாக இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்..

இதனிடையே  முதலமைச்சர் ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் பாஜகவை மறைமுகமாக விமர்சித்து கருத்து தெரிவித்திருந்தார்.. மேலும் “ எந்த வகையிலாவது தமிழ்நாட்டில் காலூன்றி விடவேண்டும் என நினைக்கின்ற மதவெறி நச்சு சக்திகள் இதுபோன்ற சூழல்களைப் பயன்படுத்திக்கொண்டு தங்களை வளர்த்துக் கொள்ள முடியுமா என்று எதிர்பார்க்கின்றன. மக்களிடையே குழப்பத்தை உண்டாக்கி, கலகம் விளைவிக்க பார்க்கின்றன. எனவே இத்தகைய நச்சு சக்திகளுக்கு சிறிதும் இடம் கொடுக்காத வகையில் நாம் கவனமுடன் செயல்படுவோம். ” என்று குறிப்பிட்டிருந்தார்..

இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழகம் அமைதிப் பூங்காவா என்று கேள்வி எழுப்பி உள்ளார்.. அவரின் ட்விட்டர் பதிவில் “ தமிழகம் அமைதிப் பூங்காவா? இனவெறி தூண்டப்பட்டு ராஜிவ் கொல்லப்பட்டது எங்கே? EPRLF பத்மநாப 14 பேருடன் கொல்லப்பட்டது தமிழகத்தில்தானே..? கோவை தொடர் குண்டு வெடிப்பில் முஸ்லிம் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட 60 பேர் உட்பட 200 பேர் இஸ்லாமிய மதவெறிக்கு தமிழகத்தில் பலி ஆகவில்லையா? “ என்று குறிப்பிட்டுள்ளார்..

Maha

Next Post

ஆ.ராசாவை கண்டித்து முழு அடைப்பு..!! தமிழக பேருந்து கண்ணாடி உடைப்பு..!! புதுச்சேரியில் பரபரப்பு

Tue Sep 27 , 2022
புதுச்சேரியில் தமிழக எம்பி ஆ.ராசாவை கண்டித்து இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நீலகிரி திமுக எம்.பி. ஆ.ராசா, நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது இந்துக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக சொல்லப்படும் வீடியோ அண்மையில் சமூக வலைதளங்களில் வைரலானது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணி மற்றும் பல்வேறு இந்து அமைப்புகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், புதுச்சேரியில் இந்து […]

You May Like