கொரோனா அதிகரிப்பை அனைத்து மாநில அரசு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் கேரள அரசு அனைத்து பொது இடங்களிலும் முகக்கவசம் கட்டாயமாக்கும் உத்தரவை பிறப்பித்தது. மாநிலத்தில் மீண்டும் கொரோனா பரவும் அபாயத்தில் இருப்பதால் கொரோனா வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

மாநில அரசின் உத்தரவின்படி, அனைத்து பொது இடங்களிலும், பணியிடங்களிலும், மக்கள் கூடும் இடங்களிலும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவாமல் தடுக்க மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றுமாறு மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.
மேலும் மக்களுக்கு சானிடைசர்களை ஏற்பாடு செய்யுமாறு கடைகள், திரையரங்குகள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துபவர்களை மாநில அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இந்த உத்தரவு அடுத்த 30 நாட்களுக்கு மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.