fbpx

ஓய்வை அறிவித்த கே.எல்.ராகுல்? பரபரப்பைக் கிளப்பிய இன்ஸ்டா பதிவு..!! உண்மை என்ன?

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் கே எல் ராகுல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்து விட்டதாக சமூக வலைதளங்களில் பரபரப்பு எழுந்துள்ளது.

இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரராக அறிமுகமானாலும், தற்போது மிடில் ஆர்டர் வரிசைக்கு பின்தள்ளப் பட்டுள்ளார் கே எல் ராகுல். அதிலும் டி 20 போட்டிகளில் அவர் அணியில் எடுக்கப்படுவதே இல்லை. சமீபத்தில் நடந்த டி 20 உலகக் கோப்பையில் கூட அவர் இடம்பெறவில்லை. இந்நிலையில் அவர் இன்று திடீரென்று தான் கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து விலகப் போவதாக அறிவித்து பரபரப்பைக் கிளப்பினார்.

நேற்று முன்தினம் கே எல் ராகுல் தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில், “நான் விரைவில் ஒரு அறிவிப்பை வெளியிடப் போகிறேன். காத்திருங்கள்” எனக் குறிப்பிட்டு இருந்தார். இதை அடுத்து சமூக வலைதளங்களில் அவர் என்ன சொல்லப் போகிறார்? என்ற எதிர்பார்ப்பு பெரிய விவாதமாக மாறியது. அதனைத்தொடர்ந்து வெளியிட்ட பதிவில், கே எல் ராகுல் தனது ஓய்வு அறிவிப்பை பற்றி பகிர்வது போன்ற வாசகங்களை இடம் பெறச் செய்தனர். அதை பார்த்த ரசிகர்கள் பலரும் கே எல் ராகுல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டாரா? என அதிர்ச்சி அடைந்தனர்.

ஆனார் சிறிது நேரத்தில் அந்த பதிவு நீக்கப்பட்டது. வேறு ஒரு வீரர் வெளியிட்ட ஓய்வு அறிவிப்பின் பதிவை அப்படியே எடுத்துக் கொண்டு, அந்த வீரரின் பெயரை மாற்றி கே எல் ராகுல் பெயர் மற்றும் புகைப்படத்தை இடம் பெறச் செய்துள்ளனர். அதனால், கே எல் ராகுல் ஓய்வு பெற்று விட்டதாக பலரும் நினைத்தனர். ஆனால், ராகுல் ஓய்வு அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை. கே எல் ராகுல் முதலில் வெளியிட்ட பதிவு குறித்து இதுவரை எந்த தகவலையும் அறிவிக்கவில்லை. அவர் என்ன அறிவிப்பை வெளியிடப் போகிறார் என்பது இதுவரை தெரியவில்லை. ஆனால், அவரது ஓய்வு அறிவிப்பு போலியானது என்பது நிரூபணம் ஆகி உள்ளது.

Read more ; ரசிகர்களின் மனதை வென்ற ஹார்ட் பீட் வெப் தொடர் நிறைவு..!! எதிர்பாராத கிளைமாக்ஸ்..!!

English Summary

‘KL Rahul might announce retirement’: KL Rahul’s latest post makes the whole cricket world jittery

Next Post

பெண்களிடம் அத்துமீறி பேசும் பிரபல யூடியூபர்..!! நடிகையை கூட விட்டு வைக்கல..!! பிரஷாந்த் ரங்கசாமியை கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்..!!

Fri Aug 23 , 2024
Netizens are slamming popular YouTuber Prashant Rangasamy for allegedly harassing women.

You May Like