fbpx

Koyambedu Market | கோயம்பேடு சந்தை நிரந்தரமாக மூடல்..? கேள்விக்குறியாகும் ஒரு லட்சம் குடும்பங்களின் வாழ்வாதாரம்..!!

கோயம்பேடு சந்தை பகுதியாகவோ, முழுமையாகவோ திருமழிசைக்கு மாற்றுவதற்கு சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் திட்டமிட்டுள்ளதாக அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை கோயம்பேட்டில் செயல்பட்டு வரும் காய்-கனி சந்தையை முழுமையாகவோ, பகுதியாகவோ திருமழிசைக்கு மாற்றி விட்டு, அந்த இடத்தை வணிக மையமாக மாற்றுவதற்கு சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் தீர்மானித்துள்ளது. கோயம்பேடு சந்தையை மூடுவது ஏழை, நடுத்தர குடும்பங்களின் வாழ்வாதாரத்தை சிதைத்து விடும்.

கோயம்பேட்டில் 85 ஏக்கர் பரப்பளவில் காய்-கனி சந்தை செயல்பட்டு வருகிறது. இதில், 27 ஏக்கர் பரப்பளவில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் கட்டப்பட்டிருக்கின்றன. மீதமுள்ள பகுதிகள் வாகன நிறுத்தம், கிடங்குகள் போன்றவற்றுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. கோயம்பேடு சந்தையில் பல்வேறு வசதிகள் இல்லையென்றாலும், சென்னை மக்களின் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத அங்கமாக திகழ்ந்து வருகிறது.

இந்த சிறப்பு மிக்க சந்தையை பகுதியாகவோ, முழுமையாகவோ திருமழிசைக்கு மாற்றுவதற்கு சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் திட்டமிட்டுள்ளது. மேலும், அந்த இடத்தில் மிகப்பெரிய வணிக மையம் அமைக்க தீர்மானித்திருக்கிறது. இதற்கான சாத்தியக் கூறு அறிக்கையை தயாரித்து வழங்குவதற்காக குஷ்மன் & வேக்ஃபீல்ட் என்ற பன்னாட்டு நிலவணிக நிறுவனத்தை அமர்த்தியுள்ளது.

கோயம்பேடு சந்தை அமைந்துள்ள 85 ஏக்கர் நிலத்தில், 29.5 ஏக்கர் நிலத்தை பூங்காக்கள், சாலைகள் ஆகியவற்றுக்காக ஒதுக்கி விட்டு, மீதமுள்ள 50 ஏக்கர் பரப்பளவில் வணிக மையம் அமைக்கப்படவுள்ளது. அதில், பன்னாட்டு நிறுவனங்களுக்கான அலுவலக கட்டிடங்கள், மால்கள், பல்வகை பயன்பாட்டுக்கான விளையாட்டு அரங்குகள் ஆகியவற்றுடன் 5 நட்சத்திர விடுதியும் அமைக்கப்படவுள்ளதாக வரைவுத் திட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோயம்பேடு காய்-கனி சந்தையை மூடிவிட்டு, வணிக மையத்தை அமைப்பதற்கான தேவையும், அவசரமும் என்ன? என்பது தெரியவில்லை. இந்த திட்டம் அமலுக்கு வந்தால், கோயம்பேடு பகுதி அழகாகவும், ஆடம்பரமாகவும் மாறும் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. ஆனால், அந்த அழகுக்கும், ஆடம்பரத்திற்கு அடியில் சுமார் ஒரு லட்சம் குடும்பங்களின் வாழ்வாதாரமும், கண்ணீரும் புதைக்கப்பட்டிருக்கும்.

கோயம்பேடு சந்தையை திருமழிசைக்கு மாற்றுவது எந்த வகையிலும் சிறந்தத் திட்டம் இல்லை. கொரோனா காலத்தின் போது கோயம்பேடு சந்தை திருமழிசைக்கு தற்காலிகமாக மாற்றப்பட்டிருந்தது. அங்கு அடிப்படை வசதிகள் இல்லாததாலும் தினமும் 2 லட்சம் கிலோ காய்கறிகள் வீணாயின. திருமழிசையில் தற்போது கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டாலும் கூட, கோயம்பேடு அளவுக்கு வணிகம் நடக்க வாய்ப்பில்லை.

கோயம்பேடு சந்தையை பராமரிக்க ஆண்டுக்கு ரூ.11.70 கோடி செலவு ஆவதாகவும், அதிலிருந்து ரூ.12 கோடி மட்டுமே வருவாய் கிடைப்பதாகவும் சி.எம்.டி.ஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே, ஆண்டுக்கு ரூ.30 லட்சம் மட்டுமே லாபம் கிடைக்கும் இந்த சந்தையை நிர்வகிக்கத் தேவையில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த பார்வை மிகவும் தவறானது. கோயம்பேடு சந்தை மூலம் கிடைக்கும் வருமானத்தைப் பார்க்கக் கூடாது. மாறாக, மக்களுக்கு குறைந்த விலையில் காய்-கனிகள் கிடைக்கவும், ஒரு லட்சம் குடும்பங்களுக்கு வாழ்வாதாரம் கிடைக்கவும் கோயம்பேடு சந்தை காரணமாக இருக்கிறது. அதைத் தான் அரசு பார்க்க வேண்டும்.

எனவே, வணிகர்கள், தொழிலாளர்கள், மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு கோயம்பேடு சந்தையை திருமழிசைக்கு மாற்றும் திட்டத்தை சி.எம்.டி.ஏ கைவிட வேண்டும். வணிக மையம் அமைக்கும் திட்டத்தை சென்னையின் வேறு பகுதிகளில் செயல்படுத்த வேண்டும்” என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Chella

Next Post

விஜய் டிவி புகழ் கைது..? அரங்கத்திற்குள் நுழைந்து அதிரவைத்த போலீஸ்..!! நடந்தது என்ன..? வெளியானது வீடியோ..!!

Thu Aug 17 , 2023
மக்களின் பொழுதுபோக்காக எத்தனை சேனல்கள் இருந்தாலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை பார்ப்பதற்காக தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறார்கள். அதற்கு காரணம் ரியாலிட்டி ஷோ, நகைச்சுவை நிகழ்ச்சிகள் மற்றும் திறமைகளை வெளிக்கொண்டு வரும் நிகழ்ச்சிகள் என அனைத்திலும் கவனம் செலுத்தி மக்களை ஈர்த்து வருகின்றனர். இந்நிலையில், ரெடி ஸ்டெடி போ நிகழ்ச்சி சீசன் 2-ஐ ரக்சன் மற்றும் விஜே விஷால் ஆகியோர் தொகுத்து வழங்கி வருகின்றனர். இந்த நிகழ்ச்சி ஞாயிறுதோறும் […]

You May Like