நாட்டில் பொதுமக்களின் நலனுக்காக மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், தபால் நிலையங்களில் பொதுமக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு விதமான சேமிப்புத் திட்டங்கள் இருக்கிறது. தபால் நிலையங்களில் குறைந்த அளவு முதலீடு செய்வதன் மூலம் நல்ல லாபம் கிடைப்பதால் பெரும்பாலான மக்கள் தபால் நிலையங்களில் சேமிப்புத் திட்டங்களை தொடங்க விரும்புகிறார்கள்.
இந்நிலையில், தபால் நிலையங்களில் தேசிய சேமிப்பு மாதாந்திர கணக்கு வருமான திட்டம் நல்ல லாபம் தரும் திட்டமாக உள்ளது. இந்த திட்டத்தில் 5 ஆண்டுகளுக்கு முதலீடு செய்ய வேண்டும். இந்த திட்டத்தில் அதிகபட்சமாக ஒரு கணக்கில் 9 லட்ச ரூபாயும், கூட்டுக் கணக்கில் அதிகபட்சமாக 15 லட்சம் வரையும் முதலீடு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட கணக்குகளை ஒற்றை அல்லது கூட்டுக் கணக்கில் தொடங்கி பயன் பெறலாம். மேலும், இந்த திட்டத்திற்கு 2023 ஜனவரி 1 முதல் மார்ச் 31ஆம் தேதி வரை 7.1% வட்டி வழங்கப்படுகிறது.