fbpx

வேலை வாய்ப்பு இல்லாதவர்களுக்கு மாசம் ரூ.1,000 வழங்கும் அரசு…! எப்படி விண்ணப்பம் செய்வது…? அவசியம் தெரிஞ்சுக்கோங்க….

தமிழக அரசு மாதம் தோறும் உதவித் தொகை எப்படி விண்ணப்பிப்பது என்பதை பார்க்கலாம்.

தமிழக அரசு சார்பில் படித்து விட்டு வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு உதவி தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு மாதம்‌ ஒன்றுக்கு ரூ.200 வழங்கபடுகிறது. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300-யும், 12-ம்‌ படித்தவர்களுக்கு ரூ.400-யும், பட்டதாரிகளுக்கு ரூ.600 தமிழக அரசால் வழங்கபடுகிறது. மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10-ம் வகுப்பு மற்றும்‌ அதற்கு கீழ்‌ படித்தவர்களுக்கு 600 ரூபாயும், மேல்நிலைக்கல்வி தேர்ச்சி பெற்றவர்களுக்கு 750 ரூபாயும், பட்ட படிப்பு முடித்த நபர்களுக்கு 1000 ரூபாய் அரசால் வழங்கபடுகிறது.

உங்கள் கல்வித்‌ தகுதியினை வேலைவாய்ப்பகத்தில்‌ பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல்‌ பதிவினை தொடர்ந்து புதுப்பித்து இருக்க வேண்டியது முக்கியமான ஒன்று‌. மாற்றுத்திறனாளிகள்‌ பதிவுசெய்து ஒரு வருடம்‌ பூர்த்தி செய்திருந்தால் போதுமானது. SC/ST பிரிவினர் 45 வயதும், மற்றவர்களுக்கு 40 வயதும்‌ கடந்திருக்கக்‌ கூடாது. விண்ணப்பதாரரின்‌ குடும்ப வருமானம்‌ ஆண்டிற்கு ரூ.72,000 க்கு மிகையாமல்‌ இருக்க வேண்டும்‌. மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான உச்சசரம்பு இல்லை. பொறியியல்‌, மருத்துவம்‌, விவசாயம்‌, கால்நடை, அறிவியல்‌ இது போன்ற தொழில்நுட்பப் பட்டம்‌ பெற்றவர்கள் இதனை பெற முடியாது.

இதற்கு நீங்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திலிருந்து விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பத்தினை தேசியமயமாக்கப்பட்ட வங்கியில்‌ துவக்கப்பட்ட கணக்கு புத்தகம்‌ மற்றும்‌ விண்ணப்பத்தில்‌ குறிப்பிடப்பட்ட பிற சான்றுகளுடன்‌ சேர்த்து விண்ணப்பிக்க வேண்டும். எனவே வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி மாதம் தோறும் இந்த திட்டத்தின் மூலம் உதவி தொகை பெறலாம்.

Vignesh

Next Post

பிரபல திரைப்பட நடிகர் காலமானார்...! சோகத்தில் திரையுலகம்...! ரசிகர்கள் அதிர்ச்சி...!

Sun Dec 4 , 2022
கொச்சு பிரேமன் என்ற மேடைப் பெயரால் அன்புடன் அழைக்கப்படும் கே.எஸ்.பிரேம் குமார், நேற்று திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். நடிகர் சுவாசக் கோளாறால் பாதிக்கப்பட்டு, கடந்த சில நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வந்தார் இந்நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 68. நாடக கலைஞராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய கொச்சு பிரேமன், மஞ்சு வாரியர் மற்றும் ஜெயராம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த […]

You May Like