உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் அடுத்த ஹண்டியாவை சேர்ந்தவர் நீரஜ். இவர் கடந்த சில வருடங்களாக குஷ்பு என்ற பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. காதலி குஷ்பு வீட்டில் பெற்றோர் இல்லாத போது இருவரும் அடிக்கடி வெளியில் சுற்றி வந்துள்ளனர்.
இந்நிலையில், குஷ்பு வீட்டில் பெற்றோர் இல்லாத நேரத்தில் இருவரும் அடிக்கடி தனியாக இருந்துள்ளனர். இருவரும் வழக்கம் போல் கடந்த சில வாரங்களாக வீட்டில் தனியாக உல்லாசமாக இருப்பதை அக்கம்பக்கத்தினர் பார்த்துள்ளனர்.
இதை குஷ்புவின் பெற்றோரிடம் தெரிவித்தார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், மகளுக்கு மாப்பிள்ளை தேடத் தொடங்கினர். இதையடுத்து குஷ்புவுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதனால் காதலனுடன் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார்.
கடந்த 26ம் தேதி குஷ்பு வீட்டில் இருப்பதை அறிந்த நீரஜ், தன்னுடன் உல்லாசமாக இருக்குமாறு வற்புறுத்தினார். குஷ்பு மறுத்ததால் ஆத்திரமடைந்த நீரஜ், வீட்டில் இருந்த கத்தியால் குஷ்புவின் கழுத்தை அறுத்து கொன்றார்.
இதையடுத்து, நீரஜ் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து குஷ்புவின் உடலை கைப்பற்றினர். இதையடுத்து நீரஜை கைது செய்தனர்.