சமீபகாலமாக மாணவ, மாணவிகள் மரணம் அதிகம் தொடர்ந்து வரும் நிலையில் அதனை வைத்து அரசியல் செய்வதும் நடைமுறையாகி வருகிறது.
ஏற்கனவே, கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளி மாணவி வழக்கு இதற்கு பெரும் சாட்சியாக இருக்கின்ற நிலையில் மேலும் இதுபோன்று கடையநல்லூரில் இறந்த மாணவன் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் செய்து உள்ளனர்.
இது தொடர்பாக வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கில் மாணவர்களின் பிணத்தை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி அறிவுரை அளித்துள்ளார்.
இறந்த மாணவனின் உடலை நாளை காலைக்குள் பெற்றோர் வாங்கி கொள்ள வேண்டும், அதனை மீறி உடலை வாங்க தவறினால் மீண்டும் இதனில் கலவரம் மற்றும் போராட்டம் நீடிக்குமானால் மாவட்ட நிர்வாகம் இறுதி காரியங்களை செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.