மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பால்கர் பகுதியில் கடந்த டிசம்பர் ஒன்றாம் தேதி கொள்ளை அடிக்க ஒரு வீட்டிற்குள் திருடன் புகுந்து இருக்கின்றான். இதனை தொடர்ந்து, அப்பகுதி மக்கள் திருடனை மடக்கிப் பிடித்து சரமாரியாக தாக்கி இருக்கின்றனர்.
இந்த தாக்குதலில் திருடன் காயமடைந்தான். திருடன் பிடிபட்டு பொதுமக்களிடம் அடி வாங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வந்தது. இந்த வீடியோவை கண்ட அப்பகுதி காவல்துறையினர் திருடனை கொடூரமான முறையில் தாக்கிய அந்தப் பகுதி மக்களின் மீது வழக்கு பதிந்தனர்.
திருடனின் மீதும் வழக்குகளை பதிவு செய்து இருக்கின்றனர். அத்துடன் திருடனை தாக்கிய ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருடன் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் இது குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.