fbpx

“நீ எல்லாம் ஒரு தாயா” கள்ளத்தொடர்பில் இருந்த தாய்; ஆத்திரத்தில் மகன் செய்த காரியம்..

சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் ஒன்றியம் வெள்ளாளபுரம் சன்னியாசி கடை பகுதியை சேர்ந்தவர் 28 வயதான ரமேஷ். லாரி பட்டறை உரிமையாளரான இவருக்கு, 26 வயதான சத்யா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். வேலை காரணமாக பட்டறையிலேயே தங்கும் இவர், வாரத்தில் 3 நாட்கள் மட்டும் வீட்டிற்கு செல்வார். இந்நிலையில், நேற்று அதிகாலையில் கொங்கணாபுரம் அருகே உள்ள கருங்கல்காடு பகுதியில், ரமேஷ் சடலமாக கிடந்துள்ளார். இதையடுத்து, தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், ரமேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இது குறித்து ரமேஷ் உடன் பணியாற்றி வந்த ஊழியர் சசிகுமார் என்பவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் தான் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். மேலும், கொலை செய்ததற்கு சசிகுமார் கூறிய காரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சசிகுமாரின் தாய்க்கும், ரமேசுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. ஒரு கட்டத்தில் இவர்களின் உறவு குறித்து சசிகுமாருக்கு தெரியவந்துள்ளது. இதனால், கள்ளத்தொடர்பை கைவிடுமாறு சசிகுமார் பலமுறை கூறியுள்ளார். ஆனால், இருவரும் சசிகுமாரின் பேச்சை கண்டுக் கொள்ளவில்லை. இந்நிலையில், சம்பவத்தன்று ரமேஷ் மற்றும் சசிகுமருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த ரமேஷ், சசிகுமாரை கத்தியால் குத்திக்கொலை செய்துள்ளார். இதையடுத்து, போலீசார் சசிகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Maha

Next Post

தந்தையின் கண் முன், 3 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..

Sat Oct 7 , 2023
ஆவடியில் உள்ள நந்தவன மேட்டூர் பகுதியை சேர்ந்தவர் 24 வயதான சைத்யாசின். வேளச்சேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் இவர் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர் தனது நண்பர்களுடன் செல்வதாக கூறிவிட்டு வீட்டிலிருந்து சென்றுள்ளார். இரண்டு நாட்கள் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை. மேலும் அவரது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த சைத்யாசின் தந்தையும், சகோதரரும் காவல் நிலையத்தில் புகார் […]

You May Like