மணிப்பூரில் குக்கி சமூகத்தை சேர்ந்த 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து, அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
மணிப்பூர் மாநிலம் உக்ருல் மாவட்டத்தில் குக்கி சமூகத்தைச் சேர்ந்த 3 பேரை ஆயுதம் ஏந்திய கும்பல் இன்று காலை சுட்டுக் கொன்றதை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். இந்த சம்பவம் குக்கி பழங்குடியினர் வசிக்கும் தௌவாய் குகி என்ற கிராமத்தில் அதிகாலை 4:30 மணியளவில் நடந்துள்ளது. அந்த ஆயுதம் ஏந்திய கும்பல், கிராமத்தை நெருங்கி காவலர்களை துப்பாக்கியால் சுடத் தொடங்கியது. இந்த சம்பவத்தில் அந்த கிராமத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர்.
இச்சம்பவத்தை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும், குற்றவாளிகளை பிடிக்க காவல்துறை மற்றும் இந்திய ராணுவம் இணைந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும் காவல்துறை உயரதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். மணிப்பூரில் ஏற்கனவே இரு சமூகத்திற்கு இடையே ஏற்பட்ட வன்முறையில் 160-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். தற்போது இந்த சம்பவத்தால் அங்கு மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.