fbpx

பாத்ரூமில் மணமகன் செய்த காரியம்; ஆத்திரத்தில் திருமணத்தை நிறுத்திய பெண் வீட்டார்..

டெல்லியில் உள்ள சாஹிபாத் என்ற பகுதியல், திருமணம் ஒன்றுக்கு கடந்த ஒரு மாதமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருமணத்தன்று, மணமக்கள் மேடைக்கு வந்து மாலையை மாற்றிக் கொண்டனர். பின்பு, நடக்க வேண்டிய மதச் சடங்குகள் எல்லாம் ஒவ்வொன்றாக நடைபெற்றது. அப்போது மருமகன், திடீரென நான் பாத்ரூம் செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார். சடங்குகள் நடைபெறும் போது பாதியில் செல்ல முதலில் அனுமதி மறுக்கபட்டலும், பின்பு பாத்ரூம் செல்ல வேண்டும் என்பதால் அவரை அனுமதித்துள்ளனர். இந்நிலையில், பாத்ரூம் சென்று விட்டு வந்த மணமகன் லேசாகத் தள்ளாடி வந்துள்ளார். இதனால், மணமகள் வீட்டாருக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

அத்தோடு நிறுத்தாமல், மணமகன் தொடர்ந்து அடிக்கடி பாத்ரூம் போக வேண்டும் என்று கூறி சென்று வந்துள்ளார். ஒரு கட்டத்தில், பாத்ரூம் சென்ற மணமகன் திரும்பவே இல்லை. இதனால் சந்தேகம் அடைந்த பெண் வீட்டார், பாத்ரூம் சென்று பார்த்துள்ளனர். அப்போது மணமகன், தனது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்திக் கொண்டிருந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மணமகள் வீட்டார், மணமகன் வீட்டாரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இரு வீட்டாருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில், பிரச்சனை காவல் நிலையத்திற்குச் சென்றது. இதையடுத்து, போலீசார் இருதரப்பினரிடமும் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால் இருவீட்டாருக்கும் அதில் உடன்பாடு இல்லை. இதையடுத்து, வேறு வலி இல்லாமல் திருமணம் பாதியில் நிறுத்தப்பட்டது.

Read more: உருளைக்கிழங்கு சிப்ஸ் சாபிட்டால் புற்றுநோய் வருமா? எச்சரிக்கும் நிபுணர்கள்..!

English Summary

marriage-was-stopped-after-seeing-the-groom-in-toilet

Next Post

தப்பி தவறியும் இந்த பொருட்களை இரவில் யாருக்கும் கொடுக்காதீங்க.. தரித்திரம் வந்து சேரும்!!

Wed Dec 4 , 2024
Don't give these things to anyone at night even if they escape.. Poverty will come!!

You May Like