ஒரு பக்கம் அர்ஜென்டினா வெற்றியை கொண்டாடும் ரசிகர்கள், இன்னொரு பக்கம் கிலியன் எம்பாப்பேயின் திறமையை எண்ணி வியக்கிறார்கள். இந்த நிலையில்தான் தற்போது திடீரென எம்பாப்பேவின் காதல் உறவு குறித்த விவாதங்கள் இணையத்தில் டிரெண்டாகி வருகின்றன.

உலகக் கோப்பை வரலாற்றில் இறுதிப் போட்டியில் அதிக கோல்களை அடித்தவர் என்ற சாதனையைப் படைத்திருக்கும் எம்பாப்பே. உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஹாட்ரிக் கோல்களை அடித்த இரண்டாவது வீரர் ஆவார். 23 வயதே ஆன எம்பாப்பே ஏற்கெனவே உலகக் கோப்பை போட்டிகளில் அதிகக் கோல் அடித்தவர்கள் பட்டியலில் ரொனால்டோ, மாரோடோனா போன்ற வீரர்களை முந்திவிட்டார். இந்த போட்டியில் பிரான்ஸ் தோல்வி அடைந்து இருந்தாலும் அந்நாட்டு இளம் வீரர் எம்பாப்பே உலக அளவில் கவனிக்கப்பட்டு உள்ளார். 4 கோல் அடித்த அவர் உலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக உருவெடுத்து இருக்கிறார்.

காதல் மன்னன் கிசுகிசு….
இந்த நிலையில் உலகக் கோப்பையின் போது அலிசியா அய்லிஸ் எனும் பிரெஞ்சு பாடகியுடன் காதல் உறவில் இருப்பதாக கிசு கிசுக்கள் பேசப்பட்டன. அதன்பின், ஏம்மா ஸ்மேட் என்ற நடிகையுடன் காதலில் இருந்ததாக கூறப்பட்டது.

அதனையடுத்து, 32 வயதான திருநங்கை ஐனெஸ் ராவு என்பவருடன் டேட்டிங் சென்ற நெருக்கமான புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. ஆனால், அவர்கள் காதலில் இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. தொடர்ந்து, மொரோக்கா வீரர் அசார்ப் ஹாகிமியை கட்டிப்பிடித்து எம்பாபே பேசிக்கொண்டு இருந்தார். அதன் மூலம், தன் பாலின ஈர்ப்பாளரா என விவாதங்கள் எழுந்தன. அடுத்து, ஸ்டெல்லா மேக்ஸ்வெல் விக்டோரியா சீக்ரெட் மாடல் என்பவருடன் கடந்த மே மாதத்தில் இருந்து டேட்டிங் செய்து வருவதாகவும் கிசு கிசுக்கப்படுகிறது.
பிரபலமானவர்கள் என்றால் பத்திரிகைகளிலும் சமூக வலைதளங்களிலும் கிசு கிசுக்கப்படுவது சர்வசாதாரணம் தான். எம்பாப்பே நட்பாகக் கூட அந்த பெண்களிடம் பழகலாம் என நாம் நினைப்பது போலவே, அவரின் ரசிகர்களும், ஆதரவாளர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.