fbpx

மனைவியின் மாதவிடாய் ரத்தம் ரூ.50 ஆயிரத்துக்கு விற்பனை..!! கணவர் குடும்பத்தார் மீது பரபரப்பு புகார்..!!

தனது மாதவிடாய் இரத்தத்தை வற்புறுத்தி எடுத்து விற்றதாக கணவர் குடும்பத்தார் மீது மருமகள் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் அமைந்துள்ள பீட் என்ற பகுதியில் 28 வயது இளம்பெண் ஒருவர் கடந்த 2019ஆம் ஆண்டு காதலித்து திருமணமாகி குடும்பத்துடன் வசித்து வருகிறார். கணவர், மாமனார், மாமியார் ஆகியோருடன் வசித்து வரும் இவரை, குடும்பத்தார் தொல்லை செய்து வந்துள்ளனர். இதனால் கடந்த 2021ஆம் ஆண்டு அந்தப் பெண் புகார் போலீசில் புகார் அளித்துள்ளார். இருப்பினும் அவரிடம் அனைவரும் சேர்ந்து சமரசம் பேசி, வழக்கை வாபஸ் பெற வைத்தனர். இந்நிலையில், தற்போது மீண்டும் அந்த பெண் புகார் அளித்துள்ளார். அதன்படி தனது மாமியார், மாமனார், கணவர், கணவரின் சகோதரர் ஆகியோர் தன்னுடைய மாதவிடாய் ரத்தத்தை எடுத்து கட்டாயப்படுத்தி விற்றதாக கடந்த மார்ச் 7ஆம் தேதி காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

மேலும், “கடந்த 2022 ஆகஸ்ட் மாதம் கணபதி பண்டிகையின்போது நான் எனது கணவரின் சகோதரர் வீட்டில் தங்கியிருந்தேன். அப்போது, எனக்கு மாதவிடாய் ஏற்பட்டது. அந்த சமயத்தில் எனது கணவரின் சகோதரர் என்னிடம் வந்து, எனது ‘மாதவிடாய் இரத்தம்’ தேவைப்படுவதாக கூறினார். நான் கோபமடைந்து அவரை திட்டினேன். மேலும், அவரது மனைவியிடம் கேட்குமாறு கூறினேன். அதற்கு அவர், ‘குழந்தை இல்லாத பெண்ணின் மாதவிடாய் இரத்தம்’ தேவைப்படுவதாக கூறினார். அதோடு இந்த இரத்தத்தை விற்றால் ரூ.50 ஆயிரம் வரை கிடைக்கும் என்றும் சொன்னார். நான் கோபப்பட்டு அவரை திட்டி இதற்கு மறுப்பு தெரிவித்தேன். இருப்பினும் என்னை மீறி எனது மாதவிடாய் இரத்தத்தை எடுத்து சென்று விட்டனர். இதற்கு என் மாமனார், மாமியார் என அனைவரும் உடந்தையாக இருந்தனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து விஷ்ராந்த்வாடி காவல் நிலையத்தின் காவல் ஆய்வாளர் தத்தாத்ரே பாப்கர் கூறுகையில், “இந்த பெண் அளித்த புகார் பெரும் அதிர்ச்சிகரமானதாக உள்ளது. இவர் அளித்த புகாரின் பேரில் அவரது குடும்பத்தார் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அவரது கணவரின் சகோதரர் பணிபுரியும் இடத்தில் நடந்ததாக கூறப்படுகிறது. மாதவிடாய் இரத்தம் மாந்திரீகத்துக்கு பயன்படுத்த விற்கப்பட்டதாக தெரிகிறது. தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்றார்.

Chella

Next Post

ஆத்திரத்தின் உச்சத்தில் இருந்த மகன்…..! கள்ளத்துப்பாக்கியால் தந்தையை சுட்ட விபரீத சம்பவம்…..!

Mon Mar 13 , 2023
நாகை மாவட்டம் வேதாரண்யம் வேம்பதேவன் காடு பகுதியைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (65) விவசாயியான இவருடைய மகன் கருணாநிதி (45) இந்த நிலையில், கருணாநிதிக்கும் அவருடைய மனைவி புனிதாவுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக, கணவரை விட்டு புனிதா பிரிந்து சென்று விட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் மனைவி புனிதா பிரிந்து சென்றதற்கு தந்தை பன்னீர்செல்வம் தான் காரணம் என்று தெரிவித்து கருணாநிதி தந்தையிடம் அடிக்கடி தகராறில்ப்ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது, இந்த […]

You May Like