fbpx

பாதியிலேயே பயணத்தை முடித்து சென்னை திரும்பிய இபிஎஸ்.. மோடி, அமித்ஷாவின் திட்டம் இதுதானா..?

டெல்லியில் பிரதமர் மோடி நடத்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கான பிரிவு உபசார விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 4 நாள் பயணமாக கடந்த 22-ந் தேதி டெல்லி சென்றார்.. டெல்லியில் உள்ள தனியார் ஹோட்டலில் ஜனாதிபதி பிரிவு உபசார விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதைத்தொடர்ந்து அவர் இன்று வரை டெல்லியில் தங்கி இருந்து புதிய ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள திரவுபதி முர்முவின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதாக இருந்தது.

இபிஎஸ் டெல்லியில் இருக்கும் போது அவர் பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரை சந்திக்க உள்ளதாகவும் கூறப்பட்டது.. மோடி, அமித்ஷாவை சந்திக்க திட்டம் இந்த சந்திப்பின்போது அ.தி.மு.க. உள்கட்சி பிரச்சினை, ஓ.பன்னீர்செல்வத்தின் செயல்பாடுகள் ஆகியவற்றை மோடி மற்றும் அமித்ஷாவிடம் எடுத்து சொல்லி பெருவாரியான நிர்வாகிகள் ஆதரவு தனக்கு இருப்பதை சுட்டிக்காட்டி பா.ஜ.க.வின் ஆதரவை பெற்றுவிட திட்டமிட்டு இருந்தார். இதற்காக எடப்பாடி பழனிசாமி தரப்பில் பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவை சந்திப்பதற்கு நேரம் கேட்கப்பட்டது.

ஆனால், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பிரிவுபசார விழா, புதிய ஜனாதிபதி திரவுபதி முர்முவின் பதவியேற்பு விழா என்று அடுத்தடுத்த நிகழ்வுகள் காரணமாக மோடி மற்றும் அமித்ஷாவை சந்திக்க எடப்பாடி பழனிசாமிக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை.

இதனால் எடப்பாடி பழனி சாமி இன்று (திங்கட்கிழமை) நடைபெற உள்ள புதிய ஜனாதிபதி திரவுபதி முர்முவின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளாமல் பயணத்தை பாதியிலேயே முடித்துக்கொண்டு நேற்று சென்னை திரும்பினார்.. அதிமுகவில் நடைபெற்று வரும் உள்கட்சி பிரச்சினையை உற்று நோக்கி வரும் பா.ஜ.க. மேலிடம், அக்கட்சியில் பிளவு ஏற்படுவதை விரும்பவில்லை என்றும், அதிமுக பிளவுபட்டு இருந்தால், 2024 நாடாளுமன்ற தேர்தலில் பெருமளவில் வெற்றி பெற முடியாது என்று பாஜக தலைமை கருதுகிறதாம்.. இதற்காகவே டெல்லியில் எடப்பாடி பழனிசாமியை மோடி மற்றும் அமித்ஷா சந்திக்க நேரம் ஒதுக்கவில்லை.. மேலும், வரும் 28-ம் தேதி செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைக்க பிரதமர் மோடி சென்னை வருகிறார். அப்போது எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இருவரையும் ஒன்றாக சந்திக்க விரும்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.. அப்போது இருவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்று அறிவுத்த உள்ளதாகவும் தெரிகிறது..

Maha

Next Post

எண்ணெய் பாக்கெட்களில் வெப்பநிலையை குறிப்பிட வேண்டாம்.. மத்திய அரசு புதிய அறிவிப்பு....

Mon Jul 25 , 2022
எண்ணெய் பாக்கெட்களில் வெப்பநிலையைக் குறிப்பிடாமல் பேக் செய்யுமாறு அனைத்து சமையல் எண்ணெய் உற்பத்தியாளர்களையும், மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் துணை இயக்குநர் அனைத்து எண்ணெய் உற்பத்தி நிறுவனங்களுக்கும் இதுகுறித்து கடிதம் எழுதி உள்ளார்.. அக்கடிதத்தில், சமையல் எண்ணெய் உற்பத்தியாளர்கள் தங்கள் லேபிளிங் நிகர அளவை அடுத்த 6 மாத காலத்திற்குள் சரிசெய்ய வேண்டும்.. இதுகுறித்து அனைத்து மாநில அரசுகளும் நிறுவனங்களுக்கு […]

You May Like